ரோட்டு கடை கொத்து பரோட்டா செய்வது எப்படி

378
ரோட்டு கடை கொத்து பரோட்டாவை வீட்டிலேயே செய்யலாம் வாங்க...

ரோட்டு கடை கொத்து பரோட்டா
தேவையான பொருள்கள்:

பரோட்டா – 2
முட்டை – 1
வெங்காயம் – 2
எண்ணெய்  –  4 ஸ்பூன்
தக்காளி – 1
பச்சை மிளகாய்  – 2
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லி – தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் –  1 ஸ்பூன்
தனி மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

செய்முறை:

பரோட்டாவை சிறிது துண்டுகளாக பிரித்து தனியாக வைத்து கொள்ளவும்.

தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளி, ப.மிளகாயை சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் தேவையான அளவு உப்பு, கரம் மசாலா, தனி மிளகாய் தூள் சேர்ந்து நன்றாக பச்சை வாடை போகும் வரை கிளறி விடவும்.

அடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக உதிரியாக வரும் வரை வதக்கவும்.

அடுத்து துண்டுகளாக நறுக்கிய பரோட்டாவை சேர்த்து மிதமான தீயில் மசாலாவுடன் சேர்த்து கலக்கவும் .

10 நிமிடம் கழித்து வாசனைக்காக கொத்தமல்லி சிறிது சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.

சுட சுட சுவையான ரோட்டு கடை முட்டை கொத்து பரோட்டா தயார். இதில் சிக்கன் அல்லது மட்டன் சேர்த்து உண்டால் சுவையாக இருக்கும்..
SHARE