விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களிலேயே பெரிய வரவேற்பை பெற்றுவரும் தொடர் சிறகடிக்க ஆசை.
இந்த சீரியலில் இப்போது விறுவிறுப்பான கதைக்களம் நகர்ந்து கொண்டிருக்கிறதுஇல்லாத அப்பாவிற்காக ரோஹினியை பரிகாரம் செய்ய கூறி விஜயா நிறைய விஷயங்கள் செய்ய வைக்கிறார், அதில் முத்து கிடைக்கும் கேப்பில் எல்லாம் மனோஜ் மற்றும் ரோஹினிக்கு செக் வைக்கிறார்.
இந்த கதைக்களம் மிகவும் காமெடியாக சென்று கொண்டிருக்கிறது, ரசிகர்களும் விரும்புகிறார்கள்.
அடுத்த கதைக்களம்
இந்த நிலையில் இன்றைய எபிசோடு கடைசியில் ஒரு குட்டி புரொமோ வந்துள்ளது.
அதில் ரோஹினி பார்லருக்கு ஜீவா வருகிறார். உடனே ரோஹினி தனது கணவர் மனோஜிற்கு போன் செய்து ஜீவா வந்ததை கூறுகிறார்.
மனோஜ் பார்லர் வந்து ஜீவாவை நேருக்கு நேர் சந்திக்கிறார், இனி அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து காண்போம்.