லக்கீம்பூர் வன்முறை சம்பவம் குறித்த வழக்கு விசாரணையை தாக்கல் செய்யுமாறு உத்தரவு!

272

லக்கீம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யுமாறு நேற்றைய தினம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதனையடுத்து குறித்த வழக்கு சம்பந்தமாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லக்கீம்பூர் வன்முறை சம்பவம் காரணமாக எட்டுபேர் உயிரிழந்துள்ளதுடன், மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.வி.ரமணா தலைமையிலான அமர்வு தானாக முன்வந்து விசாரணையை ஆரம்பித்துள்ளது.

SHARE