லண்டனில் ஆரம்பமாகவுள்ள 8 ஆவது பயிற்சிப் போட்டியில் மோதவுள்ள அணிகள்

265

உலகக் கிண்ணத் தொடருக்கான பயிற்சிப் போட்டிகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்றைய தினமும் இரு பயிற்சிப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

லண்டனில் இன்று மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள 8 ஆவது பயிற்சிப் போட்டியில் ஈயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் குல்பாடின் நாய்ப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதுகின்றன.

அதேபோன்று சவுத்தாம்டனில் ஆரம்பமாகவுள்ள 9 ஆவது பயிற்சிப் போட்டியில் திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணியும், பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியும் மோதவுள்ளன.

நேற்றைய தினம் இடம்பெற்ற இரு பயிற்சி ஆட்டங்களும் மழை குறுக்கிட்டதனால் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்தகது

SHARE