லண்டனில் சிகிச்சை பெறும் கே.எல்.ராகுல்! லக்னோ அணியின் கேப்டனாக பங்கேற்பாரா?

88

 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் லக்னோ அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் பங்கேற்பாரா என்பது சந்தேகமாக உள்ளது.

கே.எல்.ராகுலுக்கு காயம்
கடந்த ஐபிஎல் தொடரில் விளையாடிய போது கே.எல்.ராகுலுக்கு காயம் ஏற்பட்டது. அந்த காயம் தீவிரமாக இருந்ததால் ஒரு மாதத்திற்கு அவரால் எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாட முடியவில்லை.

இந்நிலையில், மீண்டும் கிரிக்கெட் போட்டிக்கு திரும்பிய கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடி வருகிறார். தற்போது, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் போது மீண்டும் ராகுலுக்கு காயம் ஏற்பட்டது.

இதனால், ஏற்கனவே காயம் ஏற்பட்ட இடத்தில் மீண்டும் வலி இருப்பதாக உணர்ந்தார். இருந்தாலும், தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது.

லண்டனில் சிகிச்சை
இதனால், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையிலான 5 -வது டெஸ்ட் போட்டியில் இருந்து கே.எல்.ராகுல் நீக்கப்பட்டார். பின்னர், பிசிசிஐ அறிவுறுத்தலின்படி லண்டன் சென்று சிகிச்சை மேற்கொண்டு உள்ளார்.

மேலும், அவருக்கு மனதளவில் உள்ள சந்தேகமா என்ற பரிசோதனையும் செய்யப்படுகிறது. அவரது உடல்நிலை பற்றிய தகவல்களை லக்னோ அணி தீவிரமாக கண்காணித்து வருகிறது.

இந்நிலையில், ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு ராகுலின் உடல்நிலை தகுதியை பெற்றுவிடுவார் என்று லக்னோ அணி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

SHARE