லண்டன் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த கோஹ்லி: ஆச்சரியத்தில் வாயடைத்து நின்ற அனுஷ்கா

330
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி, தனது காதலி மற்றும் பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார்.தற்போது அனுஷ்கா சர்மா ‘ஏ டில் ஹன் முஸ்கில்’ படத்தின் படப்பிடிப்பிற்காக லண்டனில் இருக்கிறார். இவரை கோஹ்லி நேற்று (செப்ரெம்பர் 20) பார்க்க வருவதாக கூறியிருந்தார்.

ஆனால் அவர் தனது காதலி அனுஷ்காவை ஆச்சரியப்படுத்தும் விதமாக இரண்டு நாட்கள் முன்பாகவே லண்டன் சென்றுவிட்டார்.

மேலும், அனுஷ்கா படப்பிடிப்பிற்காக ஹொட்டலில் இருந்து வெளியே வந்த பொழுது ரசிகர்களுடன் ஹொட்டலுக்கு வெளியே காத்திருந்தார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத அனுஷ்கா ஆச்சரியத்தில் உறைந்து போனார்.

மேலும், கோஹ்லி ரசிகர்களைப் போலவே அனுஷ்காவுடன் செல்ஃபி எடுத்து அவரை மேலும் ஆச்சரியப்படுத்தினார்.

பல நட்சத்திரங்களின் காதல் பாதியில் முறிந்து போனாலும் இவர்களின் காதல் ஒரு படி மேல் உள்ளதையே இது காட்டுகிறது.

SHARE