லண்டன் வீதிகளில் ரத்தம் சொட்ட, சொட்ட ஓடிய குதிரைகளால் பரபரப்பு!

141

 

மத்திய லண்டனில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் வெள்ளை, கருப்பு நிறத்தில் 2 குதிரைகள் ரத்தம் சொட்ட, சொட்ட ஓடும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லண்டனின் வரலாற்று நிதி மையத்திற்கும், நகரின் பொழுதுபோக்கு மையமான வெஸ்ட் என்ட் பகுதிக்கும் இடையே ஆல்ட்விச் அருகே தெரு வழியாக குதிரைகள் ஓடிய காட்சிகளை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்த தகவல் தெரிந்ததும் விரைந்து வந்த பொலிசார் அந்த குதிரைகளை பத்திரமாக மீட்டனர்.

இந்நிலையில் பொலிஸ் படையை சேர்ந்த அந்த குதிரைகள் பகல் நேர பயிற்சியின் போது தப்பித்து வந்ததும், சாலையில் ஓடிய போது வாகனங்கள் மீது மோதி ரத்தக்காயம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பான வீடியோக்கள் எக்ஸ் தளத்தில் பரவிய நிலையில், லண்டன் காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், மேலும் சில குதிரைகள் இதுபோன்று பயிற்சியின் போது ஓட்டம் பிடித்துள்ளன. அவற்றையும் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.

SHARE