லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம்- எவ்வளவு தெரியுமா?

68

 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகி தாறுமாறு ஹிட்டானது.

படம் நல்ல லாபத்தை கொடுக்க ரஜினி, நெல்சன், அனிருத் ஆகியோருக்கு சம்பளத்தை தாண்டி தயாரிப்பு குழு சிறப்பாக கவனித்தார்கள்.

அப்படத்தை முடித்த கையோடு நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் திரைப்படம் தான் லால் சலாம்.

கிரிக்கெட்டை மையமாக கொண்டு ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில் படு பிரம்மாண்டமாக நடந்தது. வருகிற பிப்ரவரி 9ம் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.

ரஜினி சம்பளம்
லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்கிற கதாபாத்திரத்தில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ளார். சிறப்பு வேடத்தில் நடிப்பதற்காக ரஜினி ரூ. 40 கோடி சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE