லால் சலாம் படத்தில் நடிக்க சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

67

 

6 வருடத்திற்கு பின் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள திரைப்படம் லால் சலாம். விக்ராந்த், விஷ்ணு விஷால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கிரிக்கெட் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் டிரைலர் கூட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

முதல் முறையாக தனது மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். ஏற்கனவே தனது இளைய மகள் சௌந்தர்யா இயக்கத்தில் கோச்சடையான் படத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் சம்பளம்
லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி நாளை வெளிவரவிருக்கும், லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் ரூ. 40 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம்.

இவர் இப்படத்தில் 30 முதல் 40 நிமிடங்கள் வரை நடித்துள்ளார் என கூறப்படுகிறது. அதன்படி 1 நிமிடத்திற்கு ரூ. 1 கோடி என்கிற கணக்கில் ரூ. 40 கோடி சம்பளமாக ரஜினிகாந்த் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

SHARE