லிங்கா டீசர் வெளியாகியிருக்கின்றது

416

எந்திரன், கோச்சடையான் என டெக்னாலஜி சமந்தப்பட்ட ரஜினி படங்களை பார்த்து, எப்போது சூப்பர் ஸ்டார் தன் பழைய ஸ்டையிலுடன் வருவார் என அனைவரும் காத்திருக்கின்றனர். அவர்கள் எண்ணங்களை புரிந்து கொண்டு ரஜினி தன் வழக்கமான ஹிட் ஃபார்முலா இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாருடன் இணைந்திருக்கும் படம் தான் லிங்கா.

படத்தின் டீசரை பார்த்து முடித்த பிறகு நம் மனதில் நிற்பது ரஜினி, சூப்பர் ஸ்டார், தலைவர் இதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை. ரிட்டன் ஆப் கிங் என்பது போல் அதே ஸ்டையிலுடன், அதே வேகத்தில் ஒவ்வொரு ப்ரேமிலும் கலக்குகிறார்.

இந்த வயதிலும் சுறுசுறுப்புடன் இருப்பது தான் ரஜினியின் ப்ளஸ். படத்தில் வரும் இரண்டு ரஜினியையும் ஸ்கீரினில் காட்டியுள்ளனர். அதிலும் ஒரு ரஜினி மூன்று முகம் அலேக்ஸ் பாண்டியன் ஸ்டையில். டீசரில் பார்க்கும் போதே ட்ரைன் ஃபைட் பிரம்மிக்கவைக்கிறது. பின்னணியில் ரகுமான் மிரட்டியுள்ளார். என்ன ஒரே ஒரு வருத்தம், ரஜினியின் குரலை டீசரில் கேட்காமல் போனது தான்

தற்போது எல்லோருடைய எதிர்ப்பார்ப்பும் எப்போது டிசம்பர் மாதம் வரும் சூப்பர் ஸ்டாரை திரையில் பார்க்கலாம் என்று தான். கண்டிப்பாக இதே வேகத்துடன் திரையிலும் ரஜினி கலக்குவார் என்று நம்பலாம்.

 

SHARE