லிபோர்னியாவை சேர்ந்த 92-வயது மூதாட்டி ஹாரியட் தாம்சன். இவருக்கு 10 பேரக்குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் இவர் சான்டியாகோ நகரில் நடந்த மாரத்தான் போட்டியில் கலந்துக்கொண்டு 42 கிலோ மீட்டர் தூரத்தை 7 மணி மற்றும் 24 நிமிடத்தில் கடந்து சாதனை படைத்துள்ளார்.
இந்த போட்டியின் முடிவில் அவர் கூறுகையில், “21 மைல்கள் தாண்டிய பிறகு மிகவும் சோர்வடைந்தேன். ஆனால் என் மகன் எனக்கு தொடர்ந்து கொடுத்து வந்த உணவுகளும், பானங்களும் தொடர்ந்து ஓடுவதற்கு உதவியாக இருந்தது.
இந்த வயதில் மாரத்தான் போட்டியில் ஓட நினைத்த போது கொஞ்சம் பைத்தியகாரத்தனமாக தோன்றியது. ஆனால் முடிவில் மிகவும் உற்சாகமாக உணர்ந்தேன்” என தெரிவித்தார்.
புற்று நோயால் பாதிக்கப்பட்டு பின் அதிலிருந்து மீண்டு வந்த அவர், மாரத்தான் போட்டியில் கலந்துக்கொள்வதன் மூலம் கிடைக்கும் பணத்தை புற்று நோய் தொடர்பான செயல்களுக்கு கொடுத்துவிட முடிவு செய்துள்ளார்.