90களில் தமிழ் சினிமாவில் கலக்கிய நடிகைகள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் சிவரஞ்சனி.
வசீகர கண்களுடன் ரசிகர்களை மயக்கியவர், இவர் தமிழ் சினிமாவில் பிரசாந்த், சத்யராஜ், பிரபு உள்ளிட்ட நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார்.
தமிழை தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார். முன்னணி நாயகிகள் லிஸ்டில் இருந்த இவர் ஒரு காலத்தில் மார்க்கெட் குறைய திருமணம் செய்து செட்டில் ஆனார்.
குடும்பம்
இவர் 1999ம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆந்திராவில் செட்டில் ஆகியுள்ள சிவரஞ்சனிக்கு ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
சமீபத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் அவருக்கு அண்ணனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.