மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரித்விராஜ். லூசிபர் படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ஆடு ஜீவிதம்.
நஜீப் என்பவரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து பென்யமின் எழுதிய நாவலை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் ஆடு ஜீவிதம்.
மலையாளத்தில் மிகவும் பிரபலமான இயக்குனர் பிளஸ்ஸி இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்த நிலையில், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
வசூல் சாதனை
உலகளவில் தொடர்ந்து வசூல் சாதனைகளை படைத்து வரும் ஆடு ஜீவிதம் திரைப்படம் தற்போது ரூ. 100 கோடியை நெருங்கியுள்ளது.
16 வருட போராட்டத்திற்கு பின் வெளிவந்த இப்படம் இதுவரை உலகளவில் இப்படம் ரூ. 98 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள நிலையில், நாளை ரூ. 100 கோடிக்கும் அதிகமான வசூலை குவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.