வசூலில் ரூ.200 கோடியை தாண்டி ‘விஸ்வாசம்’ சாதனை!

575
சிவா இயக்கத்தில் அஜித் 4வது முறையாக கூட்டணி சேர்ந்த திரைப்படம் ‘விஸ்வாசம்’. கிராமத்து பின்னணியில் ஏராளமான நட்சத்திரப் பட்டாளத்துடன் கதை உருவாக்கப்பட்டது. அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.
மேலும் தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, விவேக், கோவை சரளா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த பொங்கல் திருவிழாவை ஒட்டி, ரஜினியின் ‘பேட்ட’ படத்துடன் சேர்ந்து, ‘விஸ்வாசம்’ வெளியானது. இரு பெரும் படங்கள் ஒன்றாக வெளியானதால், பாக்ஸ் ஆபிஸில் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டது.

ஆனால் சர்வதேச அளவில் ‘பேட்ட’ படம் நல்ல வசூலை ஈட்டியது. அதேசமயம் தமிழ்நாட்டில் ‘விஸ்வாசம்’ படம் பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்தது. முந்தைய பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனைகளை முறியடித்து, தொடர்ந்து முன்னேற்றிக் கொண்டிருக்கிறது.

தற்போது தமிழக அளவிலான வசூலில் ‘பாகுபலி 2’ படத்தின் வசூலை முறியடிக்க, திரையரங்குகளில் வெற்றிகரமாக பல வாரங்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சர்வதேச பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, தமிழ்நாட்டில் ரூ.139 கோடி, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, பிற இந்திய மாநிலங்களில் ரூ.18 கோடி, பிற நாடுகளில் ரூ.43 கோடி வசூல் ஆகியுள்ளது. இதன் மூலம் ‘விஸ்வாசம்’ படம் ஒட்டுமொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரூ.200 கோடியை எட்டியுள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
SHARE