( தூயவன் )
2009 ம் ஆண்டுக்குப் பின்னர் வடகிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களில் அரசியல், சமூக, பண்பாட்டு விழுமியம் சார் விடயங்களில் காணப்பட்ட ஒருவகையான தொய்வு நிலை நீங்கி தற்போது தமிழ் இளைஞர்களிடையே தமிழ் சமூகம் தொடர்பிலான அக்கறையுணர்வு மற்றும் எழுர்ச்சி நிலை மனப்பாங்கு மேலோங்கி வருகின்ற சம்பவங்களை அவ்வப்போது அவதானிக்க முடிகின்றது. ஈழத் தமிழர்களின் எண்ணற்ற ஈகங்களைச் சுமந்து நின்ற சுதந்திர தாயகத்துக்கான போராட்டம் உறங்கு நிலைக்குச் சென்ற பின்னரும் பெரும்பாலான தமிழர்கள் தமது உயிருக்கும் மேலாக நேசித்த
” தமிழ் தேசியம்” என்ற உன்னத கோட்பாட்டினை ஆழமாகவும், ஆத்மாத்தமாகவும் விசுவாசித்து நிற்பது போராட்ட தர்மத்தின் நியாயமான காரணங்களும், அதனைத் தாங்கி நின்ற ஓர் தலைவனுமே காரணம் என்றால் இது மிகைப்படுத்தப்பட்ட கருத்தல்ல.
ஒரு இனத்தின் மேன்மையும், விருத்தியும் அந்த இனம்சார்ந்த தலைவர்களால் ஏற்படுத்தப்படுகின்றது என்பதனை உலக நாடுகளின் வரலாறுகள் எமக்கு உணர்த்தி நிற்கின்றது. புரட்சிகர கியூபா பெடல் காஸ்ரோவாலும், மக்கள் சீனக் குடியரசு மா சேதுங்காலும் செதுக்கியெடுக்கப்பட்டதும் தலைவர்களின் தனித்துவமான ஆளுமையின் வெளிப்பாடுகளே. உலகத் தமிழர்களுக்கும் இறைவனின் அதி உன்னத கொடையாக தலைவன் ஒருவன் அவதரித்தபோதும், வான்படை தந்த முதல் தமிழன் என்ற வரலாற்றைப் படைத்து நின்ற போதும் கேடுகெட்ட இந்த தமிழினத்தின் ஈனச் செயல்களால் அவரின் உயரிய இலட்சியம் மெய்ப்படாமல் போனதுடன் முள்ளிவாய்க்கால் துயரத்துடன் அது முடிவாகப் போவதற்கு காரணமாகவும் இருந்தது.
மூன்று தசாப்தங்களுக்கு மேலாகப் போராடிய தமிழினத்தின் வலிகளையும், உணர்வுகளையும் நெஞ்சில் சுமக்காத ஓர் மனிதர் இன்று தமிழர்களின் தலைவன் என்ற கிரீடத்தை சூடிக்கொண்டதும், சிங்கள தேசத்தின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற சிம்மாசனத்தில் வெறும் பொம்மையாக உறங்கிக்கிடப்பதும் ஈழத் தமிழர்களின் இருப்பையும், எதிர்காலத்தையும் பூச்சியம் என்ற புள்ளியை நோக்கி நகர்த்தி வருகின்றது. முதுபெரும் அரசியல்வாதி, சட்ட வல்லுனர், இராஜதந்திரி என்ற புகழாரங்களெல்லாம் பொய்த்துப்போய் விட்டது. தலைவர் ஒருபுறம், தளபதிகள் மறுபுறம், கிழக்கில் கிடக்கும் சிப்பாய்கள் இன்னோர்புறம். தமிழினத்தில் பற்றுணர்வு இன்றி உடைந்துபோய் கிடக்கும் உங்களால் எதைத்தான் இதுவரை சாதிக்க முடிந்தது??? ஆளுக்கு ஆள் மாறி மாறி ஆப்புப்போடும் அசிங்கமான அரசியலால் தமிழினத்துக்கு என்ன விமோசனத்தைத் தரப்போகின்றீர்கள்??? தமிழீழ தேசியத் தலைவரும், தாயகத்து மக்களும் தந்த மகத்தான வரலாற்றுக் கடமையை உங்களில் எத்தனைபேர் கண்ணியமாகவும், இதய சுத்தியுடனும் காப்பாற்ற தயாராக இருக்கின்றீர்கள்??? சூட்சிக்கார சுமந்திரன், இஸ்லாமியனுக்கு கழுவுவதற்கு தண்ணியும் ஒத்தியெடுப்பதற்கு ஓட்டுத்துண்டும் கொடுக்கும் துரைராஜசிங்கம், அரச அதிபரின் மாடு மேய்க்கும் துரைரெட்ணம், உலகவெளிச்சம் தெரியாத வெள்ளிமலை, பினாமி வைத்து ஆற்று மண் விற்கும் வியாழேந்திரன் என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் கட்சி ஆதரவாளர்களே காறித்துப்புமளவுக்கு நாறிப்போன அரசியல் நடத்தும் உங்களால் இதுவரை ஈழத் தமிழினத்துக்கு எதைத்தான் செய்ய முடிந்தது???
இன்று வடகிழக்கு தமிழர்களின் தாயக நிலங்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளால் வலிந்து கையகப்படுத்தப்படுகின்ற செயற்பாடுகளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தடுத்து நிறுத்துவதற்கு தவறியுள்ளது என்ற மாபெரும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருவதுடன் பாதிக்கப்பட்ட பிரதேச இளைஞர்கள் சிங்கள பெளத்த மத அடிப்படைவாதிகளின் உதவியை நாடிவருகின்றமை தமிழ் அரசியல்வாதிகள் கையாலாகாதவர்கள் என்ற யதார்த்த நிலைமையினை தெளிவாகப் புரிந்து கொண்டதே காரணமாயிற்று.
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச அதிபரின் அதிகார துஸ்பிரயோக செயற்பாடுகளால் தாயக நிலம் பறிபோவது, ஆற்று மண் கொள்ளை, வனவள அழிப்பு, பாகுபாடான வளப்பங்கீடு, இஸ்லாமியர்களுக்கான புதிய குடியேற்றங்கள், தேர்தல்களில் மோசடி போன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள அரச அதிபரை இடமாற்றம் செய்வதற்கும், நேர்மையான ஒருவரை அரச அதிபராக நியமனம் செய்வதற்கும் இந்த கூட்டமைப்புவாதிகளால் முடியாமல் போயுள்ளமையானது அவர்களின் இயலுமையில்லாத அரசியலையும், பணத்துக்கு பல் இளிக்கும் பண்பினையும் வெளிப்படுத்தி நிற்கின்றது. இதற்கு எதிர்மறையாக இளைஞர்கள் மத்தியில் 1980 ம் ஆண்டைய காலப்பகுதிகளில் ஏற்பட்ட விடுதலை உணர்வை ஒத்த ஒருவகையான கோசங்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளது என்பதுடன் இது முற்றிலும் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான கருத்தியல் மற்றும் களச்செயற்பாடுகளுடன் வலுப்பெற்று வருகிறது. இதுவே எதிர்காலத்தில் தமிழ்த் தேசியத்தை தாங்கி நிற்கும் சக்தியாக உருமாற்றம் பெறக்கூடும் என்பதுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மக்களால் தூக்கி வீசி எறியப்படும் ஓர் கட்சியாக இருக்கப்போகின்றது என்பதனை எதிர்வரப்போகும் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தவும்கூடும்
தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது வரலாற்றுத் தவறுகளை சீர் செய்து கொள்வதற்கும், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மதிநுட்பமான அரசியல் நகர்வுகளை மேற்கொள்ளுவதற்கும் ஓர் அரிய வாய்ப்பாக தேர்தல்களுக்கு முன்னரான இந்த காலப்பகுதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது இன்றுவரை கட்சியை நேசிக்கும் ஆதரவாளர்களின் மனத்துடிப்பாக காணப்படுகின்றது. வடகிழக்கு இணைந்த தாயகம், மொழிவழி வந்த பண்பாட்டுக் கோலங்கள், விரிந்துகிடக்கும் விழுமியங்கள், அழிக்கப்பட்டுவரும் தமிழர்களின் வரலாற்று அடையாளங்கள் இவற்றையெல்லாம் கட்சியே பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு நிலையும் ஆதரவாளர்கள் மத்தியில் கருத்தூண்றிக் காணப்படுகின்றது.
வடகிழக்கு இணைந்த தாயகம் என்று வரிக்கு வரி வாய் பிதற்ற கூறிவருகின்ற தமிழ் அரசியல்வாதிகள் பிரிக்கப்பட்டு செத்துக் கிடக்கும் இந்த இரு பிராத்தியங்களின் மீழ் இணைப்புக்கு இதுவரை என்ன அடியெடுப்புகளை மேற்கொண்டுள்ளனர் என்ற ஆதங்கம் தமிழர்களின் மனங்களை குடைந்து நிற்கின்றது. இஸ்லாமியர்களின் நில ஆக்கிரமிப்பு, வலிந்த குடியேற்றங்கள் என்பவற்றின் தூரநோக்கு எதிர்காலத்தில் கிழக்கில் இஸ்லாமிய சாம்ராச்சியம் ஒன்றை நிறுவுவது என்பதனை இலக்காக கொண்டுள்ளது என்பதனை தமிழ் தலைமைகள் உணர்ந்து கொள்ளாமை ஈழத் தமிழர்களின் துரதிஸ்ரமே.
கிழக்கு மாகாணத்தில் தற்போது தமிழர் சமூகம் எதிர்கொள்ளும் பன்முக பிரச்சினைகளுக்கான தீர்வாக பெளத்த மதவாதம் என்ற ஆயுதத்தை தமிழ் இளைஞர்கள் கையில் ஏந்தியிருப்பது எந்தளவு புத்திகூர்மையான செயற்பாடு என்பது ஆய்ந்தறிந்து கொள்ள வேண்டிய விடயப்பரப்பாகும். தமிழர்களுக்கு மாத்திரமன்றி சிங்களவர்களுக்கும் இஸ்லாமியர்களின் தீவிரவாத செயற்பாடுகள் பாரிய சவாலாக மாறிவருவதனால் முட்டிமோதிய இரு சமூகங்களும் பொதுவான சவால்களை எதிர்கொள்வதற்கான ஓர் உபாயமாக இணக்கப்பாட்டுடன் செயற்பட்டாலும் தமிழர் தரப்பு இதுவிடயத்தில் நிதானித்து செயற்படுவது அவசியமாகும். எதிர்காலய்தில் இது வேலியில் போன ஓணானைப் பிடித்து வேட்டிக்குள் விட்ட கதைமாக மாறிவிடக் கூடாது என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இளைஞர்களை ஆற்றுப்படுத்த முன்வரவேண்டும். அல்லது சிங்கள பெளத்த பேரினவாத ஊடுருவலுக்கு காரணமான பிரச்சினைகளை தமிழ் தேசியவாதிகள் அடையாளம் கண்டு களத்தடுப்பில் இறங்க வேண்டும். இல்லாவிடில் இது எதிர்மறை விளைவுகளை தமிழர் சமூகம் எதிர்காலத்தில் சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைகூட ஏற்படலாம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கலவரமான மனநிலையினை பொறுப்புடன் உணர்ந்து செயற்பட முன்வர வேண்டும். இல்லையேல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற அரசியல் இயக்கத்தின் அஸ்தமனம் தவிர்க்கப்பட முடியாததுடன் இளைஞர்கள் ஓர் புரட்சிகரப் பாதையில் பயணிப்பதற்கான வாய்ப்புக்களை உருவாக்கிவிடக்கூடும். எனவே தமிழ்த் தேசியவாதிகள் நேர்மை, நிதானம் என்ற பாதையில் பயணத்தைத் தொடங்குங்கள். இது உங்களுக்கான இறுதி எச்சரிக்கை!!!
Share :