வடமாகாணத்திற்குட்பட்ட அனைத்து வலயக்கல்விப்பணியாளர்களிற்குமான அவசர மாநாடொன்றை ஆளுநர் (04.06.2014) அன்று நடத்தியுள்ளார். எனினும் இம்மாநாடு பற்றி வடமாகாண கல்வி அமைச்சரிற்கு தகவல்கள் ஏதும் வழங்கப்பட்டிருக்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமாகாணசபைக்கும் ஆளுநர் சந்திரசிறிக்குமிடையேயான அதிகார இழுபறிகளிடையே மீண்டும் தன்னிச்சையாக அதிகாரங்களை ஆளுநர் அமுல்படுத்த முற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தொடர்புடைய அமைச்சரான தனக்கு தகவல் வழங்காது அதிகாரிகளை அழைத்து சந்திப்புக்களை நடத்துவது தனக்கு திட்டமிட்டு அவமதிப்பினை ஏற்படுத்தும் செயலென வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா கவலை வெளியிட்டுள்ளார்.இத்தகைய போக்குகளினால் கல்வி அதிகாரிகள் தனக்கு மதிப்பழிக்க தவறுவதாகவும் நிர்வாகத்திற்கு ஒத்துழைக்க மறுப்பதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். இத்தகைய போக்கு தொடர்ந்தால் கதிரைகளை கட்டிப்பிடித்துக்கொண்டிருப்பது பொருத்தமற்றதெனவும் அவர் தெரிpவித்துள்ளார்.