சிரச சிங்களத் தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியி்ட்டுள்ளது.
வடக்கு-கிழக்கில் வாழும் மக்களுக்கு அரசியல் தீர்வொன்றை வழங்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
அந்தத் தீர்வு அனைவருக்கும் ஏற்புடையதான தீர்வாகவே இருக்கும். எனவே அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்.
வடக்கு-கிழக்கில் வாழும் மக்களில் ஒருசிலர் விடுதலைப் புலிகளின் கோரிக்கையினை முன்வைத்து அரசியல் தீர்வினை வலியுறுத்துகின்றார்கள்.
நாட்டைத் துண்டாடி தனிநாடு பெற்றுக் கொள்வதே அவர்களின் நோக்கம் , ஆனால் அப்படியான ஒரு தீர்வு ஒருபோதும் கிடைக்காது.
யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், வடக்கில் சமாதானம் மற்றும் சகவாழ்வை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் வெற்றிபெற்றுள்ளது.
இந்த நிலை தொடர அனைத்து அரசியல் சக்திகளும் ஆதரவளிக்க வேண்டும்.
வடக்கில் இருந்த 95 வீதமான இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுவிட்டன ,வடக்கு மக்களின் காணிகளில் 92 வீதமான காணிகள் உரியவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுவிட்டன.
இதற்கு மேலாக அவர்கள் எதைத்தான் எதிர்பார்க்கின்றார்கள் என்றும் கோத்தபாய ராஜபக்ஷ தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.