வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளை பெற உதவினால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றி பெற முடியும் என ரணில் புள்ளிவிபரங்களை முன்வைத்து சம்பந்தனுக்கு விளக்கியுள்ளார்.

438
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் போட்டியிட்டால் உதவ முடியாது: சம்பந்தன் கூறியதாக லக்பிம தகவல்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் உதவ முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளதாக லக்பிம செய்தி வெளியிட்டுள்ளது.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவதா, இல்லையா என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க போட்டியிட முயற்சித்து வருகிறார்.

அத்துடன் கரு ஜயசூரிய பொது வேட்பாளராக போட்டியிடும் எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங், அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் பெறக் கூடிய வாக்கு எண்ணிக்கை தொடர்பான புள்ளி விபரங்களுடன் அவர் சம்பந்தனை சந்தித்து பேசியுள்ளார்.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளை பெற உதவினால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றி பெற முடியும் என ரணில் புள்ளிவிபரங்களை முன்வைத்து சம்பந்தனுக்கு விளக்கியுள்ளார்.

kathiraveli_tna_election_010

இதற்கு பதிலளித்த சம்பந்தன், “உங்களால் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியாது. நீங்கள் போட்டியிட்டால் எங்களால் உதவ முடியாது.

புதிய வேட்பாளரை நிறுத்துங்கள். அப்படி புதிய வேட்பாளர் நிறுத்தப்பட்டால் அவருக்கு ஆதரவு வழங்குவது பற்றி ஆராய முடியும்” எனக் கூறியுள்ளதாக லக்பிம குறிப்பிட்டுள்ளது.

 

SHARE