வடக்கு கொரோனா வலயமாக பிரகடனம் என்ற செய்தியினை மறுத்தது ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு!

450

வட மாகாணம் கொரோனா அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலினை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு மறுத்துள்ளது.

வட மாகாணம் கொரோனா அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட தகவல் வைரலானது.

இந்தநிலையிலேயே குறித்த தகவலினை ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர் மொஹான் சமரநாயக்க மறுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த தகவல் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொரோனா பரவக் கூடிய அபாய வலயமாக கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்களை அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருந்தது.

குறித்த பகுதிகளில் இருந்து அதிகளவான கொரொனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமை காரணமாகவே அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

SHARE