வடமாகாண முதலமைச்சர் தலையில் வெள்ளைத்துண்டை போட்டு வீதியில் நடப்பது மேல்

401

வடமாகாணசபை பொறுப்பேற்று ஆசனத்தில் அமர்ந்த சி.வி விக்னேஸ்வரன் இவ்வளவு காலமாக என்ன செய்கின்றார் என்ற கேள்வியை மக்கள் கேட்க ஆரம்பித்துவிட்டனர். 89 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று யாழ்.மாவட்டத்தில் வெற்றிவாகை சூடிய அனந்தி சசிதரன், வடமாகாணசபைக்கு சைக்கிளில் வந்துள்ளமையானது ஏனைய வடமாகாணசபை உறுப்பினர்கள் மீது வட மாகாண ஆளுநரும், முதலமைச்சரும் கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்துகிறது.

10346103_765079976882458_7308587164920613109_n

அரசாங்கத்துடன் சேர்ந்து கூத்தாடும் முதலமைச்சராகவே மக்கள் பார்க்கவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அதிகாரங்களை கையில் எடுத்து செயற்படமுடியாது போனால் அஹிம்சை வழியில் இறங்கி போராடவேண்டியது தானே. இல்லை உங்கள் பதவியை இராஜினாமா செய்துவிட்டு வீட்டில் நிம்மதியாய் இருக்கலாம். செய்பவனையும் விடாது, தானும் செய்யாது  டக்ளஸ் தேவானந்தா போன்று முதலமைச்சர் செயற்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட-அரச

முதலமைச்சர் பதவியை கைப்பற்றும் வரை எத்தனை பசப்பு வார்த்தைகளை பயன்படுத்தி மக்களை ஏமாற்றி, பொய்யாக தமிழ்த்தேசியம் என்றெல்லாம் வாய்கூசாது சொல்லிவிட்ட வார்த்தைகள் இன்னமும் பதிவாகவே உள்ளது. தலைவன் சொன்னதுபோல் செய் அல்லது செத்துமடி என்பது போல், எமது அரசியல் அமையப்பெறவேண்டும்.

இயக்கம் சார்ந்தவர்களுக்கு அதிகாரங்கள் வழங்குவதிலும், அவர்களை ஆதரிப்பதிலும் வடமாகாண முதலமைச்சரும் சரி, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிலுள்ள தமிழரசுக்கட்சியும் சரி வழி தவறி போவதாகவே பொதுவான குற்றச்சாட்டு நிலவிவரும் அதேவேளை, இவ்வாறான சம்பவங்களினால் அரச தரப்பு உசார்நிலை அடைகிறது. அதனால் தமிழ் மக்களின் வெற்றிக்கான முன்னெடுப்புக்கள் சறுக்கிவிடுகின்றது. ஆகவே முதலமைச்சர் அவர்களே! உங்களுடைய வயிற்றுப் பிழைப்புக்காக செயற்படாது, சுயநல அரசியலாக செயற்படாது, மக்களினதும், மாகாணசபை உறுப்பினர்களதும் விடயங்களைக் கருத்திற்கொண்டு செயற்படுங்கள்.

tna-photoஎமது உரிமைக்காக வாழ்வா சாவா. சவால்களை முகங்கொடுத்து எமது அரசியல் நகர்வை நகர்த்தவேண்டும். தீவகப்பகுதியில் உங்களை நுழையவிடாது கடற்படையினர் உத்தரவிட்டபோது, நான் இந்த மண்ணில் இறந்தாலும் பரவாயில்லை என கூறினீர்களே. அந்தத் துணிவு பாராட்டக்கூடியது. அவ்வாறான துணிந்த சம்பவங்களை மக்களுக்காக நிகழ்த்திக் காட்டுங்கள்.

 

 

– இரணியன் –

SHARE