வந்துவிட்டது 5G! முதன்முறையாக சோதிக்கும் Vodafone

253

625-500-560-350-160-300-053-800-748-160-70

பிரித்தானியாவை தளமாகக் கொண்டு பல்தேசிய தொலைத் தொடர்பு சேவையை வழங்கி வரும் நிறுவனமான Vodafone ஆனது முதன் முறையாக 5G வலையமைப்பு தொழில்நுட்பத்தினை பரீட்சிக்கவுள்ளது.

இந் நிறுவனத்தின் அவுஸ்திரேலிய கிளையே இப் பரீட்சிப்பனை மேற்கொள்ளவுள்ள நிலையில் சிட்னியிலுள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் நோக்கியா நிறுவனத்தினையும் இணைத்துக் கொண்டு செயற்படவுள்ளது.

தற்போது 4G தொழில்நுட்பமானது உலகளாவிய ரீதியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் கூகுள் உட்பட பல்வேறு நிறுவனங்கள் அடுத்த தலைமுறை வலையமைப்பு தொழில்நுட்பமான 5G இனை ஏற்கனவே பரிசீலித்துள்ளன.

எனினும் அந் நிறுவனங்கள் தமது ஆய்வு கூடங்களில் மட்டுமே இந்த பரிசோதனையை மேற்கொண்டிருந்தன.

ஆனால் Vodafone நிறுவனம் தற்போது சேவையில் உள்ள தொலைத் தொடர்பு கோபுரங்களின் ஊடாக இப் புதிய தொழில்நுட்பத்தினை பரிசோதனை செய்யவுள்ளது.

இவ் வலையமைப்பானது 4G வலையமைபினை விடவும் 100 மடங்கு வேகத்தில் செயற்படக்கூடியது. அதாவது செக்கனுக்கு 20 ஜிகாபைட் வேகத்தில் தரவுகளை கடத்தவல்லது.

SHARE