வந்துவிட்டது OnePlus 12 Smart Phone.., விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்கள் இதோ

113

 

அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த OnePlus 12 Smart Phone இன்று மதியம் 12 மணி முதல் வாங்க கிடைக்கிறது.

OnePlus நிறுவனத்தின் OnePlus Latest flagship smartphone மாடலாக OnePlus 12 Smart Phone அறிமுகம் செய்யப்பட்டது. இதனை இன்று மதியம் 12 மணி முதல் oneplus.in, Amazon India மற்றும் சில்லறை விற்பனையாளர் வழியாகவும் வாங்கலாம்.

சிறப்பம்சங்கள்
OnePlus 12 Smart Phone ஆனது 6.82” 120Hz ProXDR QHD மற்றும் AMOLED display, Aqua touch ஆகிய அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. Aqua touch அம்சத்துடன் வெளிவரும் முதல் display இது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 2K திறனுடன் display வருகிறது. அதோடு 4500 peak brightness, HDR10+, HDR Vivid, Dolby vision, DisplayMate+ ஆகிய அம்சங்கள் உள்ளன. அதுமட்டுமல்லாமல், Snapdragon 8 Gen 3 Soc, 12GB | 16GB LPDDR5X ரேம் உடன் 256GB | 512GB கொண்ட Storage உடன் வருகிறது.

கேமராவை பொருத்தவரைTriple camera அமைப்புடன் Hasselblad Tuningஉடன் வருகிறது. அதோடு, 50MP + 64MP+ 48MP Triple rear camera, முன்பக்கத்தில் 32MP Selfie camera ஆகியவை உள்ளது.

OnePlus 12 Smart Phone -ல் உள்ள 64MP sensor உடன் 3X periscope telephoto studio-level portraiture அம்சத்துடனும், 48MP sensor ultra-wide114° Fov அம்சத்துடனும் செயல்படுகிறது. Android 14 Oxygen OS இயங்குதளத்துடன் OnePlus 12 Smart Phone செயல்படுகிறது. இந்த Flagship smartphone 5400mAh பேட்டரி (battery) உடன் வருகிறது.

விலை எவ்வளவு?
OnePlus 12 Smart Phone -ன் 12GB | 256GB வேரியண்ட் ரூ.64,999 விலையில் வாங்க கிடைக்கிறது.16GB | 512GB வேரியண்ட் ரூ.69,999 விலையில் வாங்க கிடைக்கிறது.

மேலும், OnePlus 12 Smart Phone Flowy Emerald, Silky Black நிறங்களில் வருகிறது. அறிமுகம் சலுகையாக பல வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் பயனர்களுக்கு கூடுதல் தள்ளுபடி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

SHARE