இன்று காலை 10.30 மணியளவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பாக வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டபோது தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளியான பிரபாகரன் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக வவுனியா மாவட்டச்செயலகத்துக்கு வருகை தந்திருந்தார்.
Posted by Thinappuyalnews on Monday, July 13, 2015
நீங்கள் ஏன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிடுகின்றீர்கள் என அவரிடம் கேட்டபோது எமது தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களினால் உருவாக்கப்பட்டது தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. நாம் இதுவரை காலமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே ஆதரித்து வந்தோம்.
ஆனால் இவர்கள் தற்பொழுது திசைமாறி போய்க்கொண்டிருக்கின்றார்கள். தாயகம் மீட்க்கும் போரில் நாம் பங்கெடுத்து நான் இரு கால்கலையும் இழந்தேன். தமிழின மக்களுக்காக தமிழ் மக்களின் விடிவிற்காக நான் உயிர்த்தியாகம் செய்யத் தயாராக இருக்கின்றேன். மேலும் தினப்புயல் ஊடகம் கேட்ட கேள்விகளுக்கு குமாரசாமி பிரபாகரன் பதிலளிக்கையில்.