
வன்னியில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் பொழுது பல்வேறு இன அழிப்பு மற்றும் கொடுரமான சித்திரவதை செய்து பொது மக்களையும் போராளிகளயும் கொலைசெய்த இராணவ அதிகாரிகள். இதில் இந்திய ராணுவமும் இவர்களுடன் சேர்த்து போர்குற்றங்களை புரிந்துள்ளது. இந்திய இரரணுவம் போர்குற்றங்களை மேற்கொண்டது என்பதற்கு ஆதாரமாக 58 வது படைபிரிவை சேர்ந்த இராணுவ வீராரின் வாக்குமூலம் வெகுவிரைவில் இனைக்கப்படும். எவ்வாறு இந்திய ராணுவம் போர்குற்றங்களை மேற்கொண்டனர் , படைநகர்வுகள் எந்த வழி ஊடக நடத்த பட்டன. இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களை இந்திய இராணுவ அதிகாரிகளும் விசாரணை நடத்தினார்கள் என்றும் தாக்குதலை நடத்திய சிறிலங்கா இராணுவத்தின் 57வது படைப்பிரின் முன்னணிப் பிரிவான CDO என்று அழைக்கப்படும் கொமாண்டோ டிவிஷன்( CDO � Commando Regiment ) பிரிவினருடன் இந்திய இராணுவத்தின் கொமாண்டோ பிரிவு இணைந்து செயற்பட்டதாற்கு ஆதாரம்.
2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் மற்றும் 5ம் திகதிகளில் வன்னி புதுக்குடியிருப்பு மற்றும் புதுமாத்தளன் பிராந்தியத்தில் நடைபெற்ற பாரிய சண்டையில் பெரும் அளவிலான விடுதலைப் புலிகள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். விடுதலைப் புலிகளின் மிக முக்கிய தளபதிகளான கேணல் தீபன், கேணல் விதூஷா, கேணல் துர்கா, லெப்.கேணல் நாகேஷ், உட்பட நூறுக்கும் அதிகமான விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டார்கள். பெருமளவிலான ஆயுத தளபாடங்களும் சிறிலங்கா இராணுவத்தால் கைப்பற்றப்பட்டன. இரசாயன ஆயுதங்களைப் பாவித்து மேற்கொள்ளப்பட்டதாக விமர்சிக்கப்பட்ட இந்தத் தாக்குதலை சிறிலங்கா இராணுவத்தின் 57வது படைப்பிரிவின் முன்னணிப் பிரிவான CDO என்று அழைக்கப்படும் கொமாண்டோ டிவிஷன்(CDO � Commando Regiment ) மேற்கொண்டதாகக் கூறப்பட்டது. தலைமை தங்கிய போர் குற்றவாளி மேஜர் ஜெனரல் ஜகத் டியாஸ்.(Major General Jagath Dias)
ஆனால் இந்தத் தாக்குதலில் சிறிலங்கா இராணுத்துடன் இணைந்து இந்திய இராணுவமும் நேரடியாகக் கலந்துகொண்டதற்கான ஆதாரம். அன்று அனைத்து டிவிசனும் சரத் பொன்சேகாவின் கட்டுப்பாட்டில் இருந்தது ஆனால் இன்று நிலைமை வேறு .சனல் 4 தொலைகாட்சிக்கு தொலைபேசி மூலம் எடுக்கப்பட்ட வீடியோ வை வழங்கியதாக கூறி .16 டிவிசனை சேர்ந்த 44 இராணுவத்தினரை கோத்தபாயவின் நேரடி கண்காணிப்பிலும் நேரடி கட்டுபட்டிலும் இருக்கும் 11 டிவிசன் கைது செய்து சிறையில் அடைதிருகின்றனர் . இந்த 11 டிவிசன் தான் தற்போது தடுப்பில் இருக்கும் போராளிகளை கண் காணித்து வருகிறது .இவர்களின் மேற்பார்வையில் எந்த பதிவும் இல்லாத சித்திரவதை முகம் ஒன்று இருக்கிறது . இதில் முக்கியமான சிலரை வைதிருபதாக தெரியவருகிறது.