கர்ப்பப்பை கழுத்து புற்றுநோயானது இளம் பெண்களை விடவும் வயது முதிர்ந்த பெண்களையே அதிகம் தாக்குவதாக ஆய்வு அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.பிரித்தானியாவிலிருந்து வெளிவரும் British Medical Journal இத்தகவலை வெளியிட்டுள்ளது.
மேலும் 65 வயதிற்கு மேற்பட்டவர்ளே இதனால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும், இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் பாதி பேர் உயிரிழந்துள்ளதாகவும் கடந்த கால புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்டு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் கர்ப்பப்பை கழுத்துப் புற்றுநோய் ஆனது 35 வயதிற்கு உட்பட்டவர்களுக்கும் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாகவும், முதிர்ந்த வயதிலேயே அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. |