இன்றைய காலகட்டத்தில் வயர்லெஸ் தொழில்நுட்பமானது அனைத்து இலத்தினியல் சாதனங்களையும் ஆக்கிரமித்து வருகின்றது.
இத்தொழில்நுட்பம் ஹேன்ட் ப்ரீக்களையும் (HandFree) விட்டுவைக்கவில்லை.
ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்டு இயங்கும் WOHO Ideas நிறுவனம் வயர்லெஸ் தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஹேன்ட் ப்ரீயினை வடிவமைத்துள்ளது.
இவை வயர்களைக் கொண்டிராமையினால் Earbuds என அழைக்கப்படுகின்றது.
HD ஒலி நயத்தை வழங்கக்கூடியதாக இருக்கும் இவை தொந்தரவுகள் இன்றி இலகுவாக பயன்படுத்தக்கூடியதாக இருப்பதுடன், உதிரும் தன்மை அற்றனவாகவும் காணப்படுகின்றன.
தற்போது Kickstarter தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள இந்தEARBUDS இன் விலையானது 96 பவுண்ட்ஸ்கள் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.