‘‘வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பிரதமரின் பெயர் எழுதப்பட இதுவே காரணம்’’

295

நாட்டின் தேசிய உணர்வுகளை எழுப்ப பிரதமர் எமக்கு வழங்கிய தலைமைத்துவம் காரணமாக அவரது பெயர் பொன் எழுத்துக்களால் எழுதப்பட்ட பெயராக வரலாற்றில் இடம்பெறும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார (Vasudeva Nanayakkara) தெரிவித்துள்ளார்.

மாவத்தகடம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது,

இந்த நாட்டின் வரலாற்றில் பிரதமர் என்ற பெயர் அழியாத எழுத்துக்களால் எழுதப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதாவது, மிகவும் வறிய, ஒடுக்கப்பட்ட மக்களைச் சென்றடைந்து, அவர்களின் நலனுக்காக இந்நாட்டில் பல்வேறு சட்டங்களை இயற்றி, இந்நாட்டின் தேசியப் பாரம்பரியத்தையும், தேசிய சுதந்திரத்தையும் பாதுகாத்து, இந்த நாட்டில் தேசிய உணர்வுகளை எழுப்ப அவர் எமக்கு வழங்கிய தலைமைத்துவம் காரணமாக அவரது பெயர் பொன் எழுத்துக்களால் எழுதப்பட்ட பெயராக வரலாற்றில் இடம் பெறும்.

கோவிட் தொற்று காரணமாக இந்த இரண்டு வருடங்கள் இந்த நாட்டில் மிகவும் கடினமான காலம். இத்தகைய கடினமான காலகட்டம் இந்த நாட்டின் வரலாற்றில் நினைவுகூரப்படவில்லை.

எனவே இந்த ஆண்டு புதிய பயணத்தை தொடங்க உள்ளோம். இந்த ஆண்டு இந்த நாட்டின் உழைக்கும் மக்களுக்கு அவர்கள் எதிர்பார்க்கும் நிவாரணத்தையும், அவர்கள் எதிர்பார்க்கும் வெற்றியையும் வழங்க முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

SHARE