சுதந்திர இலங்கையின் 73ஆவது வரவு செலவுத் – திட்டம் இன்று (05) செவ்வாய்க்கிழமை நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது.
நாடு சுதந்திரமடைந்து 73ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
இன்றைய நிதியமைச்சர் மங்கள சமரவீர சுதந்திர இலங்கையின் 24ஆவது நிதி அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவர் கடந்த 28ஆம் திகதி தனது அரசியல் வாழ்வில் 30ஆண்டைப் பூர்த்திசெய்துள்ளார்.
கடந்த வருடம் (2018) அக்டோபர் மாதம் 05ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவிருந்த வரவு – செலவுத் திட்டம் அன்று ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக தடைப்பட்டது. நெருக்கடி நிலைக்கு தீர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் புதிய வரவு – செலவுத்திட்டத்தை தயாரித்து இன்று நிதியமைச்சர் சமர்ப்பிக்கின்றார்.
இது நிதியமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பிக்கும் இரண்டாவது பட்ஜட் இஃது என்பது குறிப்பிடத்தக்கது.