பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இவ் வருடத்திற்கான வரவு – செலவு திட்டத்தில் நாளாந்தம் 50 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது. எனினும் நேற்று நிதி அமைச்சர் மங்கள சமவீரவினால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட வரவு – செலவு திட்டத்தில் இந்த விடயம் குறித்து எதுவுமே தெரிவிக்கப்படவில்லை.
எனவே வரவு – செலவு திட்டத்திற்கு ஆதரவளிப்பது குறித்து பெருந்தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படும் தலைவர்களான மனோ கணேஷன் மற்றும் திகாம்பரம் ஆகியோர் மக்கள் சார்பாக சிந்தித்து தீர்மானமெடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
சுதந்திர கட்சி காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்த்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.