வெப்பம் படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமான நானி, ஈ படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இந்த படங்களுக்கு பிறகு தெலுங்கில் பைசா என்ற படமும், தமிழில் ஆஹா கல்யாணம் என்ற படமும் நடித்திருந்தார். ஆனால் இவ்விரண்டு படங்களுமே மிகப்பெரிய தோல்வியை அடைந்துள்ளது.
கடந்த ஆண்டு நானிக்கு எந்த திரைப்படமும் வெளிவரவில்லை.
இந்த ஆண்டு வெளிவந்த இரண்டு திரைப்படமும் அவருக்கு சரியான வெற்றியை தரவில்லை. எனவே இப்போது நானியின் மூன்றாவது படம் ஜென்டபை கபிராசு படம் வெளியிட பிரச்சனைகளை எதிர்க்கொண்டுள்ளது.
பைசா, ஆஹா கல்யாணம் படங்கள் தோல்வியை அடைந்துள்ளதால் இந்த படத்தினை வெளியிட தயங்குகின்றார் தயாரிப்பாளர். இதனை பார்க்கையில் நானி தனது படங்களுக்கு சரியான திட்டம் போடவில்லை என்று தான் தெரிகிறது.
நானி விரைவில் ஒரு வெற்றி படத்துடன் மீண்டும் திரையுலகில் கலக்குவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.