OnePlus 12 Smartphone தற்போது சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இது 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.
இந்த Smartphone Apple, Samsung போன்ற நிறுவனங்களின் Premium வகை Smartphone-களுடன் கடுமையாக போட்டியிடும் என கூறப்படுகிறது.
இது வரும் 2024-ம் ஆண்டின் மிகச் சிறந்த Smartphone என்று கூறப்படுகிறது. அதற்கான 5 காரணங்களை பற்றி விரிவாக காணலாம்.
OnePlus 12 Smartphone 6.82 inch QHD+ Display கொண்டுள்ளது. இந்த Display 4,500nits Supreme brightness-ஐ கொண்டுள்ளது. அதாவது வலுவான சூரிய ஒளியில் கூட காட்சி நன்றாக இருக்கும்.
OnePlus 12 Water Ressistant
இதில் Rainwater Touch Technology பயன்படுத்தப்பட்டுள்ளதால் மழைக்காலத்திலும் மொபைல் Display பிரச்சனை இல்லாமல் வேலை செய்யும்.
இது முதன்முதலில் OnePlus Ace 2 Pro மொபைலில் அறிமுகப்படுத்தப்பட்டது.
OnePlus 12 Processor
இந்த Smartphone Qualcomm Snapdragon 8 Gen 3 Chipset-ஐ கொண்டுள்ளது. இந்த Chipset மூலம், OnePlus 12 சிறப்பாக செயல்படுகிறது.
மேலும் Games விளையாடவும், videos பார்க்கவும் இது சிறப்பான அனுபவத்தை தரும்.
OnePlus 12 Battery
இந்த Smartphone -ல் 5,400mAh பெரிய battery-ஐ கொண்டுள்ளது. மேலும், 100W Wired charging மற்றும் 50W Wireless charging-ஐ ஆதரிக்கிறது.
இதன்மூலம், விரைவாகவே Charge செய்யலாம்.
OnePlus 12 Camera
இதில் 50MP main camera, 64MP telephoto camera and 12MP ultra-wide camera ஆகியவை அடங்கும். Main camera 50MP Sony IMX766 sensor பயன்படுத்துகிறது.
OnePlus தனது Smartphone -ல் முதல் முறையாக Periscope Camera-ஐ சேர்த்துள்ளது. இந்த Camera 6x Optical zoom வழங்குகிறது.