வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கான போக்குவரத்தில் பாதிப்பு – நந்திக்கடலூடாக பயணம்

454

முல்லைத்தீவில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்காக பொதுமக்கள் மேற்கொண்ட பயணத்தில் பல அசௌகரியங்களை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதுக்குடியிருப்பில் இருந்து கேப்பாப்புலவு வீதி புனரமைப்பு செய்யாத காரணத்தினால் இந்த பாதை குன்றும் குழியுமாக இருந்து பொதுமக்கள் பாரிய கஸ்டங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

மேலும் பல உள்வீதிகள் புனரமைப்பு செய்யாத காரணத்தினால் வயல் வரம்புகளிலும், வடிகால் அமைப்பில்லாத காரணத்தினால் நீர்த்தேக்கங்களைக் கடந்து நந்திக்கடலூடாக படகின் மூலம் கோயிலை வந்தடைந்துள்ளார்கள்.

இவ்வாறு பல கஸ்டங்களை அனுபவித்து வந்த நிலையில் சிலர் முதுகில் காவடி முள்ளு குத்தி நேர்த்திக் கடன்களை தீர்த்துள்ளார்கள். பக்தியின் உச்ச கட்டமாக ஆண்களும் பெண்களும் தம்தை வருத்தி நேர்த்திக் கடன்களை செலுத்தியுள்ளார்கள்.

நேர்த்திகடன் தொடர்பாக சம்மந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்டபோது,

“தமக்கு தீங்கு எதுவும் நடந்து விடவில்லை என்பதற்காக நேர்திக்கடன் செய்தோமே தவிர நன்மை எல்லாம் நடந்துவிட்டதற்காக அல்ல, எமது அடிப்படை வாழ்வியல் பிரச்சினைகள் எதுவுமே இன்னமும் தீர்க்கப்படவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்த சூழ்நிலையில் ஆலய வளாகத்தினுள் உடல் உறுப்புக்களை இழந்தவர்களும், வயோதிபர்கள் சிலரும் யாசித்துக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிந்துள்ளது.

தெற்கு வீதியில் மாற்றுத் திறனாளிகள் அமைப்பு ஒன்று பொதுமக்களிடம் 50ரூபாய் பணத்தை கேட்டு பெற்றுக் கொண்டிருந்தனர். சிறுவர்கள் சிலர் விளையாட்டுப் பொருட்களை பார்த்து ஏங்கிக் கொண்டிருந்தனர்.

கைவிடப்பட்ட நிலையில் முதியவர்கள் தீர்க்க முடியாத சோகத்தை முகத்தில் வெளிப்படுத்தி அமைதியாய் இருந்துள்ளனர். மேற்படி ஆலய தரிசனம் மூலம் மக்கள் தமது தேவைகளையும் தீர்வில்லாத பிரச்சினைகளையும் பக்தி பரவசத்துடன் கடவுளிடம் வெளிப்படுத்தியுள்ளார்கள்.

SHARE