வலிகட சிறைச்சாலை படுகொலையின் ஒரு சாட்சியம்

504

இலங்கை வரலாற்றில் மிக முக்கியமான சாட்சியாக இருப்பவரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அந்த நேரத்தில் முதலாவதாக கைது செய்யப்பட்டவரும் இராணுவ முகாம்களுக்குள் வைத்து சித்திரவதை அனுபவித்தவரும், அந்த அனுபவங்களைக் கொண்டவரும் அதுமட்டுமன்றி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வெலிக்கடை சிறைச்சாலை மிகவும் பிரபல்யமான இடம். அங்கு தமிழ் அகதிகள் பல நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு அங்கு அடைக்கப்பட்டார்கள். வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து 1983 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இந்த மிகப்பெரும் கொடூரமான கொலைகளின் சாட்சியாக இருப்பவரும் மட்டக்களப்பு சிறைச்சாலை உடைப்பிலும் ஓர் சாட்சியாக எங்கள் முன்னிலையில் இருக்கும் பேராசிரியர் நித்தியானந்தனை இந்த நேரத்திலே சந்திக்கினறோம்: வணக்கம்

கேள்வி : இந்த 1983 ஆம் ஆண்டு இனக்களவரம் எப்பொழுதுமே எங்களது மனதை விட்டு அகலாத ஒன்று. இந்த காலகட்டகளில் அந்த நேரத்தில் உள்ள உறவுகளை இழந்தவர்களும் மற்றும் நேரடியாக அனுபவப்பட்டவர்களும் அதிலிருந்து புலம்பெயர்ந்து இங்கு வெளிநாடுகளுக்கு வந்தவர்களுமாக எங்கள் தமிழினமே சிதறி சின்னாபின்னமாக போனவொரு ஆண்டு 1983 ஆம் ஆண்டு, அதன் சாட்சியாக நீங்கள் இருக்கின்றீர்கள். இந்த படுகொலைகள் முக்கியமான கேள்வியை எங்களுக்குள் எழுப்புகின்றது. இது திட்டமிட்டு நடத்தப்பட்டதொன்றா அல்லது எதிர் பார்க்காமல் திடீரென்று ஏற்பட்டதொன்றா? உண்மையில் நடந்தது என்ன?

பதில் : வெலிகடை சிறைச்சாலையில் என்னொடு கைது செய்யப்பட்ட சக அரசியல் கைதிகள் 53 பேர்களின் படுகொலையை நினைவு கூர்ந்து அவர்களுக்கு இந்த அஞ்சலியை முதலில் நான் செலுத்த விரும்புகின்றேன். இந்த 1983 ஆம் ஆண்டு இனப்படுகொலையை ஜெனசைரைட் என்று தாராளமாக கூறலாம். அந்த நேரத்திலேயே பியதாஸ என்னுமொரு சிங்கள எழுத்தாளன் தி கொல கோஸ்ட் அன்ட் த ஆப்டர் என்ற இனசங்காரம் என்ற அர்த்தத்திலே அந்த காலகட்டத்திலே இதை சிங்கள எழுத்தாளர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். இலங்கையின் இனவாத வரலாற்றை நாம் பார்த்தோமானால் அது எல்லா சந்தர்ப்பத்திலும் ஒரு திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்டிருப்பதை நாம் காணலாம் 1956 இல் இருந்து நாம் காணமுடியும். ஆனால் 1983 ஆம் ஆண்டு அது திட்டவட்டமான அரசாங்கமே சேர்ந்து இணைந்து செயற்படுத்திய ஒரு இனசங்காரம் என்பதில் எந்த சந்தேசமும் இல்லை. அந்த காலகட்டத்திலே ஜே.ஆர். ஜெயவர்தன அவர்கள் இலங்கையின் ஜனாதிபதியாக இருந்தவர். அவருடைய முழு அமைச்சரவையும் இந்த படுகொலைக்கான ஒரு பின்னணியில் செயற்பட்டிருக்கிறார்கள் என்பதை இன்று நாம் மிகவும் துல்லியமாக காண முடிகிறது. அவருடைய அமைச்சரவையில் கைத்தொழில் அமைச்சராக இருந்த ஸ்ரீ மக்டிவ்ன் ஒரு மிக மோசமான இனவாத பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டிருந்தார். அதை ஒருபோதுமே ஜே.ஆர். ஜெயவர்த்தன தடுத்ததே கிடையாது. டயவொலிக்கல் கொன்ஸ்பிரஸி என்றவொரு நூலை எழுதியிருந்தார். கௌத கொட்டியா என்றவொரு நூலை எழுதியிருந்தார். பல்கலைக்கழகங்களுக்கு திருட்டுத்தனமான வழியிலே எவ்வாறு தமிழர்கள் செல்கின்றார்கள் என்ற ஏடுகளை இவர் அரசாங்க செலவிலே அச்சிட்டு வெளியிட்டிருந்தார். அது மட்டுமல்ல லலித் அத்துலதுமலி அந்த காலகட்ட அமைச்சரவையிலே வர்த்தக அமைச்சராக இருந்தவர். அத்துடன் காமினி திஸாநாயக்க மகாவலி திட்டத்திற்கு பொறுப்பானவராக இருந்தார். காமினி திஸாநாயக்க யாழ்ப்பாண பொது நூல் நிலையம் எரிக்கப்பட்ட போது அங்கே காமினி திஸாநாயக்க அமைச்சராக அந்த சம்பவம் நடந்த பொழுது முன்னணியில் நின்று அந்த நூலகத்தை எரிப்பதிலே செயற்பட்டிருக்கிறார் என்பது சரித்திர ரீதியான உண்மை. ஒரு முழு அமைச்சு பட்டாளமுமே அதில் செயற்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக ரணில் விக்ரமசிங்கவும் கூட அந்த அமைச்சரவையில் கல்வியல் அமைச்சராகவும் நிலையியல் விவகாரங்களுக்கான அமைச்சராகவும் இருந்திருக்கிறார். பண்டிதரட்ன என்று மிகப்பெரும் அறிவாளி என்று கூறப்படும் ஐக்கிய தேசிய கட்சியினுடைய கட்சித் தலைவராக இருந்திருக்கிறார். ஜி.வி.பி சமரசிங்க கமினட்டினுடைய ஒரு செயலாளராக இருந்திருக்கிறார். போல் பரரா என்ற மிக முக்கியமான ஐக்கிய தேசிய கட்சியினுடைய தூண் என்று கூறப்படும் போல் பரரா கொழும்பு இக்கனமிக் கொமிஸ் என்று கூறப்படும் பொருளாதார ஆணைக்குழுவின் ஒரு பொறுப்பாளராக இருந்திருக்கிறார். இந்த முழு அமைச்சரவையுமே இந்த படுகொலைகளுக்கு பொறுப்பு வைக்க வேண்டும். தனது சொந்த பிரஜைகள் மீது கட்டவிழ்த்து விட்ட காட்டுமிராண்டித் தனமான இனவன்முறையினுடைய உச்ச கட்டமாக 1983 ஆம் ஆண்டு இனக்களவரத்தை நாம் காண முடியும். அது உண்மையில் 1983 ஆம் ஆண்டு நடைபெற்றது என்றாலும் 1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டது இத்தகைய ஒரு இனசங்காரத்திற்கு ஒரு முன் சமிஞ்சையாக, அழிவின் அறிகுறியாகவே அது நடத்தப்பட்டது. இதில் என்ன நடந்தது என்றால் சிங்கப்பூரின் லீக் குவானியை நான் இங்கு நினைவு கூற விரும்புகின்றேன். அவர் 1940 களிலே சிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற பொழுது அங்கே ஒரு இனக்களவரம் வெடித்தது. மலாயர்களுக்கும் சீனர்களுக்கும் இடையே நடைபெற்ற ஒரு இனக்களவரம் 1946, 1948 பகுதிகளில் வெடித்த பொழுது அந்த களவரத்தில் ஈடுபட்டவர்களை மலாயர்களை மிக கடுமையான ஒரு தண்டனைக்கு லீக்குவானி உத்தரவிட்டார். அந்த இனவன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது. அது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இத்தகையதொரு இன நச்சு விதை நாட்டிலே பரவவிடக்கூடாது என்று அந்த நாடு சுதந்திரம் பெற்ற காலத்திலே மிக அவதானமாக லீக்குவானி செயற்பட்டதன் காரணமாகத் தான் அந்த நாட்டிலே பல்வேறு இனக்குழுக்கள் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழல் உருவானது. ஆனால் இங்கே இந்த 1983 ஆம் ஆண்டிலே முழு இலங்கை அரசாங்கமும் தங்களின் சொந்த பிரஜைகள் தமிழ் மக்களுக்கு எதிராக ஸ்தாபனமயப்படுத்தப்பட்ட ஒரு இனவன்முறையை கொண்டிருக்கிறார்கள் அது அரசு அமைச்சரவை பல்கலைக்கழகங்கள் பத்திரிகைகள் அரச நிறுவனங்கள் சிவில் அமைப்புகள் இராணுவம் பொலிஸ் என்று சகல அமைப்புகளுமே ஒரு இன ரீதியான ஸ்சுவன்வாஸ் என்று நாம் கூறலாம். ஒரு ஸ்தாபன மயப்படுத்தப்பட்ட ஒரு இன வன்முறையை அவர்கள் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். இதுவொரு 1983 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட யூலை 20 ஆம் திகதியே பத்திரிகை தணிக்கை விதி விதிக்கப்பட்டது.
எனவே அரசாங்கத்திற்கு தெரிந்திருந்தது ஏதோவொன்று நடக்கப்போகின்றது என்று. ஆனால் ஒரு கிழமையாக அவர்கள் எந்தவிதமான கட்டுப்பாட்டையும் மேற்கொள்ளவில்லை. அதுமட்டுமல்ல 1983 ஆம் ஆண்டு இனக்களவரம் நடைபெற்ற பொழுது 24 ஆம் திகதியே ஆரம்பமாகிவிட்டது. நான்கு நாட்களின் பின் அதுவரை ஜே.ஆர். ஜெயவர்த்தன எந்தவிதமான ஒரு அறிக்கையையும் விடவே இல்லை. பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் குற்றுயிரும் கொலையுயிருமாக கொல்லப்பட்ட அந்த நிகழ்ச்சிக்கு எந்த அமைச்சரும் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. நான்கு நாட்களுக்கு பின் ஜே.ஆர். ஜெயவர்த்தன தொலைக்காட்சியிலே வந்த பொழுது அவர் ஆற்றிய உரையின் பின் நச்சுக் கிருமிகள் நாட்டில் பரவியது என்று தான் கூற வேண்டும். இந்த சிங்கள மக்களின் காடைத்தனத்தை; த மாஸ்ட் மூமன்ட் ஒப் த ஜென்ரைட்டி ஒப் சிங்கள பியூப்பிள் என்று அவர் கூறினார். சிங்கள மக்களினுடைய ஒரு வெகுஜன எழுச்சி என்று அதை அவர் வர்ணித்தார். அது மட்டுமல்ல அவர் கூறினார் த டைம் அஸ் கம் டூ எக்சிட் டூத கம அன்ட் த ஜென்ரைட்டி ஒப் சிங்கள பியூப்பிள் என்று அவர் கூறினார். அதாவது சிங்கள மக்களினுடைய ஒரு கௌரவத்திற்கும் தேசிய பெருமைக்கும் இடமளிக்க வேண்டிய ஒரு தருணம் வந்துவிட்டது என்று அவர் கூறினார். இப்படியொரு ஜனாதிபதியாக இருக்குமொரு மனிதன் இவ்வளவு தமிழ் மக்கள் கொல்லப்பட்ட நேரத்தில் சிங்கள மக்களின் பொது எழுச்சியாக காடை கூட்டத்தினுடைய வன் செயலை பொது எழுச்சியாக வர்ணிக்கும் ஒரு மனிதன் இந்த இலங்கையினுடைய முழு சரித்திரத்தையுமே இரத்த வெள்ளத்திலே பெருக்கெடுத்து ஓடவிட்ட மிக குறூறமான அரசியல் நிகழ்ச்சியை அவர் செய்திருக்கிறார். சரித்திரத்தின் கதை கேட்ட ஒரு குப்பை மேட்டிற்குரிய ஒரு ஜனாதிபதியாகவே நாம் ஜே. ஆர். ஜெயவர்த்தனவை பார்க்கிறேன்.

கேள்வி : எந்த இடத்திலும் இவ்வாறு ஒரு இனவன்செயல் இன படுகொலையின் மூலமாக ஓர் சமுதாயத்தையே அழித்ததன் பின்னர் ஜே. ஆர். ஜெயவர்த்தன போன்றவர்கள் எந்த இடத்திலும் இதற்காக மன்னிப்பு கேட்டவில்லை என்று தான் வரலாறு கூறிக்கொண்டிருக்கிறது. அது தொடர்பாக அவர்கள் எப்பொழுதாவது சிந்தித்திருக்கிறார்களா?
பதில் : உலகத்திலுள்ள எந்த நாடுகளுமே உன்னதமான நாடுகளோ உன்னதமான மனிதர்களோ என்று இல்லை. ஆனால் ஒரு நாடு நாகரீகமாக நடைபெறுகின்றது என்பதற்கு என்ன அர்த்தம் என்றால் தாங்கள் இழைத்த கொடுமைகளை அநீதிகளை அது அநீதிகள் தான் என்;று பின்னாள் நீங்கள் அறிய வருகின்ற பொழுது அதை ஏற்றுக்கொள்வது தான் அந்த நாகரீகத்தினுடைய அடையாளம். குற்றமே இழைக்கப்படாத உன்னதமான நாடு உலகத்தில் எங்குமே இல்லை. ஆனால் ஒரு அநியாயம் இழைக்கப்பட்டது என்று தெரிந்த பின் அதை ஏற்றுக்கொள்கின்ற நாகரீகம் தான் மிக முக்கியமானது. அந்த நாகரீகம் ஒருபோதும் ஜே.ஆர்.ஜெயவர்தனவிடம் இருந்ததே இல்லை.
குறிப்பாக 1983ஆம் ஆண்டு வன்முறை எவ்வாறு இடம்பெற்றது என்பது குறித்து அவர் ஆராயப்போவதே கிடையாது. ஆகவே 1983ஆம் ஆண்டு இனவன்முறை இடம்பெற்று 20 ஆண்டுகளின் பின் தான் சந்திரிக்கா குமாரதுங்க ஒரு ஆணைக்குழுவை நியமித்து ஏன் இவ்வாறு நடைபெற்றது என்பது குறித்து ஆராய முற்பட்டார். அதை முற்றுமுழுதான பூரணமான ஆய்வு என்று சொல்லமுடியாவிட்டாலும் அர்த்தத்தில் அது ஒன்று தான் இந்த 1983 வன்முறை குறித்த ஆய்வு. ஜெயவர்த்த, லலித் அத்துலத் முதலி அவரும் அக்களவரத்தின் பின் தொலைக்காட்சிக்கு வந்த அவர் கூறினார் சிங்கள மக்கள் லைனில் நின்று உணவுக்காக கஷ்டப்படுவதை பார்க்க தன்னால் சகிக்க முடியவில்லை என்று கண்ணீர் வடித்தார் என்பது ஒரு அபத்தமானதொன்று. தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள் அந்த வகையில் எங்கோ சிங்கள மக்கள் சிலபேர் அகதிகளாக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதை பெரிதுபடுத்தி காட்டியது எங்களுக்கு தெரியும். எனவே அந்த வகையில் சிங்கள அரசு அந்த இனவன்முறைக்கு பொறுப்பு வகிக்க வேண்டும். இதுவரை அவர்கள் அதற்கு மன்னிப்பு கேட்கவில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
கேள்வி : அத்துடன் இந்த இனவன்முறைகள் ஆரம்பத்திலிருந்தே பிரித்தானியர்கள் தங்களுடைய காலணித்துவ ஆட்சியை கொடுத்துவிட்டு வந்ததன் பின்னர் ஆரம்பித்த இந்த இனவன்முறைகள் இன்னும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. மிகப்பெரிய ஒரு சோகமான விடயம். வெலிகட சிறைக்கொலை உள்ளது அதை நீங்கள் நேரடியாக கண்முன்னே பார்த்துள்ளீர்கள். வெலிக்கட சிறைச்சாலை கொலைகள் எவ்வாறு நிகழ்ந்தது?, எப்படி அதற்குள்ளே ஆயுதங்கள் வந்தன?, அதற்கான வாய்ப்புக்களை எப்படி உருவாக்கினார்கள்?
பதில் : வெலிக்கட சிறைச்சாலையில் இரண்டு பகுதிகள் உள்ளன. ஒன்று பிரதான சிறைச்சாலை வெலிக்கட மற்றையது மகசின்பிரசின்ட் என்று கூறக்கூடிய இன்னுமொரு பகுதி. நாங்கள் உண்மையில் மகசின்பிரசின்டில் சிறைவைக்கப்பட்டிருந்தோம். என்னுடன் வைத்தியர் ஜெயகுல ராஜா இருந்தார். பின்னர் பிரதான சிறைச்சாலைக்கு நாங்கள் மாற்றப்பட்டோம். வெலிக்கட சிறைச்சாலை கிட்டத்தட்ட 800 கைதிகளை கொண்டமைந்த இலங்கையின் மிகப்பெரிய சிறைச்சாலையுமாகும். அங்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கைதிகளாக நாங்கள் இருந்தோம். கிட்டத்தட்ட 70 பேருக்கும் மேல் அங்கே சிறை வைக்கப்பட்டிருந்தோம். அதிலே குட்டிமணி தங்கத்துறை ஜகன் போன்றோர் அவர்களின் வழக்கு விசாரணை முடிந்து அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளாக அவர்கள் வெலிக்கடயில் இருந்தார்கள். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நாங்கள் அங்கே இருந்தோம். அவசரகால சட்ட விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டவர்களும் இருந்தார்கள். இதைவிட அவசரகால சட்டத்தின் கீழும் இல்லாமல் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழும் அல்லாமல் எந்தவித குற்ற விசாரணைகளும் குற்ற பத்திரங்களும் தாக்கல் செய்யப்படாத நிலையிலே பல தமிழ் இலங்கையர்கள் அங்கே கைது செய்யப்பட்டிருந்தார்கள். இதிலே நாங்கள் கிட்டத்தட்ட 3 பகுதிகளிலே தமிழ் அரசியல் கைதிகள் சிறையிலே வைக்கப்பட்டிருந்தார்கள். டீ செல் என்னும் ஒருசெல் அதிலே 6 அரசியல் கைதிகள் வைக்கப்பட்டிருந்தார்கள். ஊ3 என்ற ஒரு செல் இருந்தது, னு3 என்று இன்னுமொரு செல் இருந்தது. ஊ3 என்ற செல்லிலே தான் குட்டிமணி தங்கத்துரை ஜகன் போன்ற அரசியல் கைதிகள் சிறை வைக்கப்பட்டிருந்தார்கள். யூலை 25 ஆம் திகதி இந்த தாக்குதல் நடத்தப்பட்ட பொழுது டீ செல்லிலிருந்த 6 அரசியல் கைதிகளும் னு3 யில் இருந்த 29 அரசியல் கைதிகளுமாக 35 அரசியல் கைதிகள் கொல்லப்பட்டுவிட்டார்கள். அந்த படுகொலைகள் எவ்வாறு நடைபெற்றது என்று சொல்வதற்கு அங்கு யாருமே மிஞ்சியிருக்கவில்லை. ஆனால் 25 ஆம் திகதி நடைபெற்ற அந்த கொலைகளுக்கு பின் 2 நாட்கள் கழித்து 27 ஆம் திகதி நடைபெற்ற படுகொலையிலிருந்து தப்பிய சிலரில் நானும் ஒருவன்.
எனவே 25ஆம் திகதி நடைபெற்ற கொலையை பற்றி கூற ஒருதருமே மிஞ்சவில்லை. அந்த 2 செல்களிலும் இருந்த அனைத்து கைதிகளுமே கொல்லப்பட்டுவிட்டார்கள். மறுநாள் மிகவும் பதட்டமான சூழ்நிலை அங்கே காணப்பட்டது. உண்மையில் 25ஆம் திகதி இந்த படுகொலைகள் நடைபெற்ற பொழுது நாங்கள் ஜங் ஒப்படன்ட்டஸ் என்றவொரு சிறைச்சாலைக்குள்ளே வைக்கப்பட்டிருந்தோம். அது உண்மையிலே இளம் பிள்ளைகளை குற்றம் செய்த சிறுவர்களை தடுத்து வைப்பதற்கான சிறைக்கூடமது. அதனுடைய சுவர்கள் மிக உயரமானவை. மிகநீண்ட உயரத்தில் அமைக்கப்பட்ட ஜன்னலின் வழியாக கொஞ்சம் வெளிச்சம் தெரியும். மற்றும்படி கிட்டத்தட்ட ஒரு இருண்ட சிறைக்கூடம் போலவே அந்த ஜங் ஒப்படன்ட்டஸில் இருந்தது. இந்த சிறைச்சாலைக்குள் பாதர் சிங்கராஜ, பாதர் சின்ராசா என்னும் இருவரும் கத்தோலிக்க பாதிரிமார்கள். இதனை விட மெதரிஸ் பாதிரிகளான ஜெயதிலகராசா இருந்தார். அவருடைய சகோதரரான ஜெயகுலராஜா இருந்தார். மற்றும் நான் ஆக 5 பேர் மட்டுமே அந்த சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தோம். இது கிட்டத்தட்ட ஹை செக்கியூரிட்டி உடைய அதியுயர் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தோம். வெலிகட சிறைச்சாலையினுடைய பிரதான வாயினில் இருந்து எங்களுடைய சிறைச்சாலைக்கு வருவதென்றால் 15 வாயில்கள் வரை அவர்கள் கடந்து வர வேண்டும். பொதுவான கைதிகள் யாருமே எங்களை பார்க்க முடியாது. மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட சிறைக்கூடமது. அங்கே குறிக்கப்பட்ட, அனுமதிக்கப்பட்ட சில அரசியல் கைதிகளும் ஜெயிலர்ஸ்கள் மட்டுமே அங்கே வந்துபோவார்கள். இந்தநிலையில் 25 ஆம் திகதி பகல் 2 மணியளவில் விசில் சத்தங்கள், கூச்சல் குரலும் அந்த சிறைச்சாலையில் எழுந்ததை நாங்கள் பார்த்தோம். சிறைக்கம்பிகளுக்கூடாக நாங்கள் பார்த்த பொழுது காவல் அதிகாரிகள் ஓடுகின்ற காட்டியைத் தான் நாங்கள் பார்க்க முடிந்ததே தவிர எங்களுடைய சிறைச்சாலைக்குள் இருந்து குட்டிமணி தங்கத்துரை ஆகியோர் அடைக்கப்பட்டிருந்த பகுதியை எங்களால் பார்க்க முடியாது சுவர்கள் மறைத்துவிடுகின்ற நிலை. நான் 2 சந்தர்ப்பங்களில் மாத்திரமே குட்டிமணியை பார்த்தேன். ஒன்று சட்ட வழக்கறிஞர்கள் அரசியல் கைதிகளை வந்து சந்திக்கும் பொழுது 2 சந்தர்ப்பங்களில் அவர்களை நானும் சந்திக்க சென்ற பொழுது பார்த்திருக்கின்றேன். தங்கத்துறையை நான் ஒரு முறை மாத்திரம் பார்த்திருக்கிறேன். சிங்கள பெருநாளின் போது சகல அரச கைதிகளுக்கும் வெளியில் இருந்து உறவினர்கள் சாப்பாடு கொண்டுவந்து கொடுப்பது வழக்கம். ஆனால் அந்த குறிக்கப்பட்ட தினத்தில் தங்கத்துறைக்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுக்கப்பட்ட பொழுது அந்த சிறை அதிகாரி அவருக்கு கொடுக்க மறுத்த பொழுது தங்கத்துறை அந்த அதிகாரியுடன் சண்டை பிடித்துக்கொண்டிருந்தார். ஆனால் அவர் கூறினார் இது சிங்கள மக்களுக்கு மட்டும் உரிய ஒரு பெருநாள். உங்களுக்கு வேறொரு நாள் இருக்கிறது அந்த நாளில் தான் உங்களுக்கு சாப்பாடு கொண்டுவர அனுமதிக்கலாம் என்று அவர் கூறிய பொழுது தான் நான் தங்கத்துறையை சிறைக்குள்ளே பார்த்தேன்.
எனவே இந்த ஜங் ஒபன்டன்ஸ் என்ற செல்லுக்குள் நாங்கள் இருந்து பார்த்த பொழுது செப்பன்ஸ் செக்சன் எங்களுக்கு தெரியாது. ஆனால் நாங்கள் நினைத்தோம் அங்கு இருக்கின்ற கைதிகள் ஏதும் ஸ்போட்ஸ் நடத்துகின்றார்களோ என்றவாறு தான் தெரிந்தது. ஏனென்றால் சத்தமும் விசிலும் கூச்சலும் ஒரு உற்சாகமான ஒரு நிகழ்ச்சி நடப்பதை போன்று இருந்தது. அன்று 2 மணிக்கு நடந்தது ஒரு 15, 20 நிமிடங்களுக்குள் 35 தமிழ் கைதிகளும் கொல்லப்பட்டுவிட்டார்கள். அங்கு இருந்தவர்கள் சாதாரண சட்டங்களின் கீழ் அடைத்துவைக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் தான். அவர்கள் தானாகவே ஜெயிலை உடைத்து சென்றிருக்க முடியாது. சிறை அதிகாரிகளினுடைய அனுரணையுடன் அவர்கள் அதை உடைத்து சென்று அதுவும் ஒவ்வொரு செல்லிலும் ஒரு தனி நபரே இருந்தார்கள் அங்கே தாக்குவதற்கு எதுவுமே இருந்திருக்காது. குறிப்பாக எங்களுக்கு ஒரு சின்ன வாளி ஒன்று சிறுநீர் கழிப்பதற்காக தரப்பட்டிருந்த ஒரு வாளி மட்டும் தான் ஒருவேளை கையில் எடுத்து தாக்குவதற்கு பாவித்திருக்கக்கூடிய ஒரே ஒரு சாதனமாக இருந்திருக்க வேண்டும். சில நிமிடங்களுக்குள்ளேயே அவர்கள் அனைவருமே கொல்லப்பட்டுவிட்டார்கள். ஒரு சின்னப்பையன் குருநகரிலே கைது செய்யப்பட்ட பையன் தான் இறுதியாக கொல்லப்பட்டுவிட்டதாக அங்கே கதைத்தார்கள். அது எந்தளவுக்கு உண்மை என்று எனக்குத்தெரியாது. அன்று அந்த கொலைகள் நடந்து முடிந்தபின் சாதாரணமாக 7 மணி வரையிலும் பொது அறையிலே இருக்கலாம். 7 மணிக்குப்பின் தான் அவர்கள் எங்களை தனி செல்களிற்குள்ளே பூட்டுவார்கள். ஆனால் அன்று 5 மணியளவிலே சிறை அதிகாரிகள் எங்களை சிறைக்குள்ளே அடைத்துவிட்டார்கள். அப்பொழுதும் 35 பேர் அங்கே கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரியாது. அங்கு சிறை அதிகாரி ஒருவர் எங்கள் மீது அன்பானவர். ஆவர் சில கை சைகைகள் மூலம் எனக்கு அதை விளங்கப்படுத்தினார். ஆனால் சிறைச்சாலைக்குள் படுகொலைகள் நடக்க முடியும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. சிறைக்கூடங்கள் நிதியமைச்சின் நிர்வாகத்தின் கீழ் இருக்கின்றன. இலங்கையின் நிதியமைச்சின் கீழ் அதியுயர் பாதுகாப்பின் கீழ் இருக்கின்ற நாங்கள் கொல்லப்படுவோம் என்று நான் ஒருபோதுமே கருதியிருக்க முடியாது. மறுநாள் 26ஆம் திகதி பயங்கரமான அமைதியான குழப்பமான நிலை நிலவியது. இரு செல்களிலும் உள்ளவர்கள் முழுவதுமாக கொல்லப்பட்ட பின்னர் மீதி வெலிக்கட சிறைச்சாலையில் இருந்த கைதிகளை எங்களுடைய செல்லுக்குள்கொண்டு வந்து சேர்த்தார்கள். அது இரண்டு மாடி கட்டடம் நாங்கள் கிரவுன்ட் புளோரிலே ஒவ்வொரு செல்லிலும் ஒரு தனி ஆளாக அடைத்து வைக்கப்பட்டிருந்தோம். அப்பொழுது தான் டேவிட் ஐயா னுச. காந்திதிலே மற்றும் நிறைய கைதிகளை அங்கு கொண்டு வந்து எங்களது செல்லிலே அடைத்தார்கள். மேல் மாடி ஒரு மண்டபம் போல் அமைந்திருந்தது. எங்கள் அனைவரையும் மேலே ஏற்றிவிட்டு. கீழே உள்ள செல்களிலே ஏனைய இடங்களில் இருந்து வந்த கைதிகளை ஒவ்வொரு செல்லிலும் மூன்று பேராக போட்டிருந்தார்கள். கிட்டத்தட்ட 2 மணியளவில் அன்று கூச்சல் எழ ஆரம்பித்தது. எங்களுக்கு எழுதுவதற்காக மிக நீண்ட போராட்டத்தின் பின் 2 டெஸ்க் வழங்கப்பட்டிருந்தன. அதன் மீது ஏறி நான் பார்த்த பொழுது நூற்றுக்கணக்கான சிங்கள கைதிகள் அந்த சுவரைத் தாண்டி எங்களுக்கு கீழே உள்ள அந்த வாயிலை உடைக்க வருவதை நான் பார்க்கிறேன். வெளியிலே இருக்கும் சிறை ஜெயிலர் சாவியை உடனடியாக கொடுத்துவிடுகிறார். ஆனால் அந்த சாவி கொத்தில் 20, 25 சாவிகளுக்கு மேல் இருந்தபடியால் எந்த சாவி இந்த குறிக்கப்பட்ட பூட்டிற்கு பொருந்தும் என்று அந்த கைதிகளுக்கு தெரியாது அவர்கள் தடுமாறிக் கொண்டிருந்தபொழுது பூட்டை அவர்கள் உடைக்க ஆரம்பிக்கிறார்கள். 800 பேரிற்கு சமையல் செய்கின்ற டிப்பார்ப்மன்ட் மிக அண்மையில் இருக்கிறது. அந்த சமையலறைக் கூடத்திற்கு பாவிக்கின்ற இரும்புகள் பெரிய அண்டாக்களை தூக்குவதற்கான இரும்புத்தடிகள் போன்றவற்றை அவர்கள் அனைவரும் கையில் வைத்திருந்தார்கள். இதைவிட அங்கே விறகுகளை கொத்துவதற்காக பாவித்த கோடரிகளையும் அவர்கள் கொண்டிருந்தார்கள்.
எனவே தாருமாராக அந்த பூட்டு உடைக்கப்பட்டு அவர்கள் வெள்ளமாக உள்ளே புகுர்கின்றார்கள் உள்ளே வந்து கிரவுண்ட் புளோரில் உள்ள செல்களை உடைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அது மிக சாதாரணமான பூட்டுகள் தான் சில தமிழ் இளைஞர்கள் தங்களது வெட்சீட்டுகளை அந்த இரும்புக்கம்பிகளில் கட்டி இழுத்துப்பிடித்துக்கொண்டதனால் அந்த சிறைக்கதவுகள் உடைந்தாலும் அவர்கள் திறக்கமுடியாத அளவிற்கு அவர்கள் மூடிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். சில இடங்களில் பூட்டு உடைந்துவிட்டாலும் அந்த கொழுக்கி கம்பிகள் வளைந்துவிட்டதால் அவர்களால் திறக்க முடியாமல் சில செல்களிலே இருந்த தமிழ் இளைஞர்கள் தப்பித்துவிட்டார்கள். மற்றைய அனைவரையும் அவர்கள் வெட்டி கொன்று முடித்துவிட்டதன் பின் அவர்கள் மேல் மாடிக்கு வந்து எங்களது சிறைக்கூடத்தை உடைக்க ஆரம்பித்தார்கள். என்ன செய்வது என்ற நிலையில் நாங்கள் இருந்தோமானலும்; உடனடியாகவே நான் ஒரு ஸ்ரூலை உடைத்தேன் அது மிகப்பெரிய ஸ்ரூல் தான் ஆனால் சுலபமாக உடைக்கக்கூடியதாக இருந்தது. நானும் சாம் அவர் ஒரு மெதடிஸ் பாதர் ஆகவே அந்த நேரத்தில் இளைஞராக இருந்தது நாங்கள் தான். நானும் சாமும் அந்த தடிகளை உடைத்துக்கொண்டு கதவை நோக்கி பாய்ந்தோம் எங்களது கதவை உடைத்துவிட்டார்கள். கதவு திறபட்டு விட்டது. ஆயுதங்களுடன் அவர்கள் நிற்கின்றார்கள் ஆனாலும் அவர்கள் உள்ளே வருவதற்கு அஞ்சினார்கள் எங்களது கைகளிலும் தடிகள் இருந்தது. தடிகளுடன் தானும் சாமும் எதிர்த்து தாக்க தொடங்கினோம் பாதர் சின்றாசும் ஜெயகுலராசாவும் ஏனைய இரண்டு தடிகளை எடுத்துக்கொண்டு பக்கத்திலே தாக்குதலுக்கு தயாராக இருந்தார்கள்.
எனவே நாங்கள் தடிகளுடன் திறந்திருந்த கதவுக்கு நடுவே நின்றேன். அப்பொழுது தான் இந்த அநியாய குறூதகொலை நடந்தது. எங்களுடன் னுச. ராஜசுந்தரம் இருந்தார், டேவிட் ஐயா இருந்தார், னுச. தர்மலிங்கம் இருந்தார், சுதந்திரன் ஆசிரியர் கோவை மகேஸன் இருந்தார்கள். கதவு திறபட்ட அந்த சமயத்தில் னுச. ராஜசுந்தரம் சிங்களத்திலே அவர்களோடு ஏய் மல்லி அபிடி கானவா என்று ஏன் எங்களை அடிக்க வருகின்றீர்கள் என்று அவர்களை கேட்டார். அந்த கேள்வியை புரிந்து கொல்லுகின்ற ஒரு கூட்டம் அல்ல அது கதவு திறந்த நேரத்தில் அவர் அதை பேச முற்பட்டபொழுது அவரை கையை பிடித்து வெளியே இழுத்தார்கள். அவர் பச்சை நிற வற்றிக் சாரத்தை அணிந்திருந்தார். 2 மணி என்றதால் நாங்கள் சாப்பிட்டுவிட்டு அகோரமான வெக்கையாக இருந்தமையால் நாங்கள் சட்டைகளை கழற்றிவிட்டு வெறும் சரங்களோடு மட்டுமே இருந்தோம். அவரை வெளியே இழுத்து எடுத்தார்கள். இழுத்து அவருடைய சாவு துரித கதியிலே நடைபெற்றது. தலையில் அடித்த ஒரே அடியிலே அவரது தலையில் இருந்து கோஸ் பைபில் இருந்து இரத்தம் சீறுவதைப்போல சீறியது.

கேள்வி : நினைவுகள் உண்மையிலே மிகவும் கவலைக்குறிய விடயம் அந்த சாட்சியாக நீங்கள் மட்டுமே எங்களுக்கு முன் இருக்கின்றீர்கள். 1983ஆம் ஆண்டு நினைவுகளை ஒவ்வொருவரும் நினைக்கும் பொழுதும் அந்த சோகங்கள் மனதிற்குள்ளே அப்பிக்கொண்டிருக்கிறது. ஏனெனில் நேரடியாக இடம்பெறுகின்ற இந்த கொடூரங்கள், கொலைகள் மனிதத்தின் மீதான தாக்குதல்கள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்பது தான் தமிழர்கள் மத்தியிலே இருக்கின்ற ஒரு மிகப்பெரும் சோகமாக இருக்கின்றது. 1983 படுகொலைகளுக்கு பின்னராவது சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமை, அவர்களுக்கான மொழிப் பிரயோகத்திலாலான சுதந்திரம் அல்லது அவர்கள் வாழ்வதற்கான உரிமைகளை கொடுக்கின்றார்களா என்று கேட்டால் அது தொடர்ந்தும் இல்லை மறுக்கப்பட்டே வருகின்றது. ஆகவே இந்த நிலைமை ஜே.ஆர். ஜெயவர்தனவினுடைய ஆட்சிக்காலத்தில் இருந்து ஆரம்பத்தில் சிங்கள சிறி போராட்டம் மற்றும் அதற்கு முதல் சுதந்திரம் கிடைத்த காலத்திலிருந்து இடம்பெற்றிருக்கின்ற மிகப்பெரிய ஒரு நெருக்குதலுக்குள்ளான தமிழினம் தொடர்ந்தும் இந்த நெருக்குதலை அனுபவித்துக்கொண்டிருக்கிறது என்பது தான் ஒரு சோகமான விடயம். ஆகவே அதற்கு பின்னர் சிறைச்சாலையில் இருந்து சிறைக்கைதிகள் தான் இந்த படுகொலைகளில் ஈடுபட்டார்களா?
பதில் : உண்மையில் இது அரசாங்கத்தினுடைய பூரண அனுசரணையோடு சிறை அதிகாரிகளின் பூரண ஒத்துழைப்புடன் நடைபெற்ற படுகொலை இது. இந்த படுகொலையை அவர்கள் திட்டவட்டமாக நிறுத்தியிருக்க முடியும். ஏனெனில் 800 சிறைக்கைதிகளை கொண்ட சிறைக்கூடத்திலே ஆயுதம் வைத்திருக்கின்ற அதிகாரம் அதிகாரிகளுக்கு உண்டு. இவர்கள் அச்சுறுத்தி இருந்தால் கூட அந்த காடயர்கள் கைதிகளினுடைய படுகொலைகளை அவர்கள் நிச்சயமாக நிறுத்தியிருக்க முடியும். கிட்டத்தட்ட வைத்தியர் ராஜசுந்தரம் கொலை செய்யப்பட்ட பின் அரை மணிநேரம் மூர்க்கமான தாக்குதலை நடத்த நேரிட்டது. உண்மையில் அந்த கேட் வாயினிலே இரத்தம் பரவ ஆரம்பித்தவுடன் அவர்கள் வெறுங்காளோடு வந்த கைதிகள் சிங்களவர்களின் கால்களிலே இரத்தம் உறைந்து சில நிமிடங்களிலே என்ன செய்யலாம் என அவர்கள் திணறிக்கொண்டிருந்த நேரத்திலே ஒருவர் அவரை வெளியே இழுத்துக்கொண்டு சென்றுவிட்டார்கள். அரை மணி நேரம் நாங்கள் மூர்க்கமாக எதிர்த்து போராடிய பின் இராணுவம் உள்ளே நுழைந்ததன் பின் நாங்கள் கீழே கைகளை உயர்த்திய வண்ணம் மேல் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்த போது அந்த கீழுள்ள செல்களிலே இரத்தம் வடிய வடிய இருப்பதை பார்க்க முடிந்தது. இறுதி மூச்சை இழுத்துக்கொண்டிருந்த நிலையிலே அந்த இளைஞர்கள் மிகக்கொடூரமாக செல்லுக்குள்ளே கொல்லப்பட்டவர்களை இழுத்தெடுத்து ஒரு வீர சாகசங்களை நடத்தியதை போல அவர்கள் செல்லுக்கு வெளியிலே அவர்களை கொண்டு வந்து கிடத்தியிருந்தார்கள். அவர்களினுடைய முகம் மிகக்கொடூரமாக கோடரியால் சிதைக்கப்பட்டிருந்ததை பார்த்தோம். கிட்டத்தட்ட 53 அரசியல் கைதிகள் இரண்டு தினங்களில் கொல்லப்பட்ட மிகக்கொடூரமான கொலைகள் பற்றிய விசாரணைகூட வெலிகடையிலே நடைபெறவில்லை. லியோடி சில்வா என்ற சுப்பின் ஒப் ஒப்பரேசன் நடத்த முயன்ற விவாதம் கூட நடைபெறவில்லை. இன்று வரை அந்த கைதிகள் யார் என மிக இலகுவாக கண்டுபிடித்திருக்க முடியும். ஆனால் அதுபற்றிய எந்த விசாரணையும் இற்றை நாள் வரை கிட்டத்தட்ட ஒரு கால் நூற்றாண்டு நடைபெற்று முடிந்த பின்னரும் கூட குறித்த எந்த விசாரணையும் இல்லை. ஆகவே சென்னையில் தான் சில மனித உரிமைகள் சார்பிலே எங்களை என்ன நடந்தது என்று அறிய முற்படுவார்களே தவிர அரசு அது குறித்து எந்த வித அக்கறையும் கொள்ளவில்லை. ஏனெனில் அரசே முன்நின்று நடத்திய ஒரு கோர நாடகம் அது.
கேள்வி : ஏன் இந்த நினைவுகளை நாம் நினைவு கூற வேண்டும் என்ற கேள்வி ஒன்று எழுகின்றது. மீண்டும் மீண்டும் நாங்கள் ஏன் இதை நினைவு கூற வேண்டும்?
பதில் : உலகத்தில் இதுபோன்ற சிறுபான்மையின மக்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களை மறந்துவிடக்கூடாது என்பது தான். யாழ்ப்பாண நூல் நிலையம் எரிக்கப்பட்ட சம்பவமோ அல்லது இந்த படுகொலை நிகழ்ச்சிகளோ இன்னும் கூட தொடர்ந்து கொண்டிருக்கின்ற ஒரு நிலையில் நாம் அதை நினைவுகூற வேண்டியது ஒரு சமூக கூட்டத்தினுடைய ஒரு அம்சம் என்றே நான் நினைக்கின்றேன்.

கேள்வி : இந்த நினைவுகளை மட்டுமல்ல நீங்கள் இதனை முழுமையாக ஒரு எழுத்துப்பதிவாக நிச்சயமாக செய்ய வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. ஏனெனில் எங்களின் இனத்தினுடைய வரலாற்றின் ஒரு சாட்சியாக நீங்கள் இருக்கின்றீர்கள். ஆகவே உங்களுடைய இந்த அனுபவத்தை ஒரு எழுத்து மூலமாக பதிய வேண்டும். பொதுவாகவே இந்த நினைவுகள் எங்களது இளைய சமுதாயத்திற்கு அவர்கள் பட்ட கஷ்டங்களும் துன்பங்களும் அவர்களுடைய மன உணர்வுகளும் வெளிப்படையாக மிக விரிவாகவும் தெரியப்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் எங்களுடைய இளைஞர்கள் இந்த விடயங்களைப் பற்றி தெரிந்து கொள்ளாமலே வாழ்ந்த கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான உணர்வுகள் ஊட்டப்பட வேண்டும். ஏனெனில் ஆரம்பத்தில் நடைபெற்ற ஒவ்வொரு சிறுபான்மை இனங்கள் மீது இடம்பெற்ற இனப்படுகொலைகளும் இன்றும் கூட ஆபிரிக்கர்கள் தங்களுடைய நினைவுகளை மீண்டும் மீண்டும் தங்களது சந்ததியினருக்கு நினைவுபடுத்திக்கொண்டு இருக்கிறார்கள் எழுத்து மூலமாக மற்றும் அவர்களின் கதைகள் மூலமாக. அவ்வாறு தமிழ் குழந்தைகளுக்கும் இந்த விடயம் தொடர்பாக தெரியப்படுத்த வேண்டும்.
நீங்கள் கூறிய கருத்துக்கள் உள்ளத்தை தொடுகின்றன. ஆனால் இதற்குரிய எதிர்கால சட்டங்களை நாங்கள் வளர்க்க வேண்டும். எதிர்காலத்தில் என்றாவது ஒருநாள் சர்வதேச நீதிமன்றில் மனித இனத்திற்கு எதிராக கொடூரங்களை செய்தவர்களை தண்டிக்க வேண்டும். அதற்கு வேண்டிய ஆதாரங்கள் திரட்டப்பட வேண்டும். இது எப்பொழுது நடக்கும் என்று தெரியவில்லை. நடக்கின்ற வேளையில் நாங்கள் உயிருடன் இருப்போமோ தெரியவில்லை. ஆனால் சட்ட ரீதியாக ஒரு நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள வேண்டிய வகையில் இந்த கருத்துக்கள் இந்த நேர்காணலில் நீங்கள் நேரிலே கண்ட கொடுமைகள் பதியப்பட வேண்டும். இதை செய்வதற்காக தனியொரு மனிதனாக உங்களால் இயன்ற நூலை எழுதி உலகத்தில் உள்ள அத்தனை தீயவர்களுக்கும் பரப்ப முடியாது. இதற்கு தேவை ஒரு கற்றல் திறமை கொண்ட குழு அமைக்கப்பட்டு அந்த பணிகளில் அவர்கள் ஈடுபட வேண்டும். உண்மையில் எங்களுடைய இலங்கையிலுள்ள தமிழ் சட்டத்தரணிகளால் இதை செய்ய முடியுமோ தெரியவில்லை. காரணம் எங்கள் நாட்டில் எஞ்சியிருக்கின்ற அவர்களுடைய குடும்பங்களை கொலை செய்துவிடுவார்கள். ஒரு சட்டத்தரணிகள் குழு அமைத்து அந்த குழுவின் முன்னால் இத்தகைய உங்களைப்போன்று அனுபவமுடையவர்கள் அனுபவங்களை பதிய வேண்டும். எதிர்காலத்தில் மனித குலத்திற்கு எதிராக இத்தகைய கொடூரங்களை இழைத்தவர்கள் தண்டனைக்குரியவர்களாக்க வேண்டும். இத்தகைய நியாயங்களுக்குப்பின் பல வருடங்களிற்கு பின்னர் சர்வதேச நீதிமன்றங்களிலே குற்றவாளிகளை முன்கொண்டு வந்தார்கள். இத்தகையதொரு நிலையை உருவாக்குவதற்கு தமிழ் சமூகம் முன் வந்து வேண்டிய பணிகளை செய்ய வேண்டும் என்று கருதுகிறேன். இதைப்பற்றி உங்களது கருத்து என்ன?
பதில் : உண்மையில் இதுவொரு இலங்கை சங்காரத்தின் உச்சகட்ட படுகொலைகளாக இந்த படுகொலைகள் அமைகின்றன. உலக நீதிமன்றின் முன் இத்தகையதொரு இனப்படுகொலையை செய்த அரசு முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதிலே எந்த கருத்து வேறுபாடுமில்லை. ஆனால் அதற்காக நீண்ட விரிவான தயாரிப்புக்களை ஆற்றல் கொண்ட சட்டத்தரணிகள் நான் மட்டும் இல்லை இதிலிருந்து என்னுடன் வெளியேறிய வேறு பலர் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் இணைத்து இந்த சாட்சியங்களை கோர்த்து பதிவு செய்ய வேண்டிய தேவை, கடமை நம்முன் உள்ளது என்ற கருத்தை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.

SHARE