வவுனியா கண்டி வீதி புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் தனி நபர் ஒருவர் இன்று காலை முதல் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளார்.
கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் அதுரலிய ரத்ன தேரருக்கு ஆதரவான போராட்டத்தினை இன்று காலை 9மணி முதல் வவுனியா கண்டி பிரதான வீதியிலுள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு முன்பாக வெளிக்குளம் பகுதியைச் சேர்ந்த தேவராஸா கோபாலகிருஷ்னண் (42வயது) என்பவர் ஆரம்பித்துள்ளார்.
இதேவேளை தனிநபர் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மணித்தியாலயத்திற்குள் அவருக்கு ஆதரவாக இன்னுமொருவரான த. சண்முகம் (வயது 49) உக்கிளாங்குளம் பகுதியைச் சேர்ந்தவரும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.