வவுனியாவில் தம்முடன் வாக்குவாதப்பட்டவரை ஆட்டோவில் ஏற்றிச் சென்று தாக்கிய போக்குவரத்து பொலிசார்!

362

 

வவுனியாவில் தம்முடன் வாக்குவாதப்பட்டவரை ஆட்டோவில் ஏற்றிச் சென்று தாக்கிய போக்குவரத்து பொலிசார்!
போக்குவரத்து பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பஸ் நடத்துனர் ஒருவரை ஆட்டோ ஒன்றில் ஏற்றிச் சென்று போகுவரத்து பொலிசாரால் தாக்கப்பட்ட சம்பவம் நேற்று இரவு வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
unnamed (3)
வவுனியா, 1ஆம் குறுக்குத் தெரு, தனியார் பஸ் தரிப்பு நிலையப் பகுதி வீதியில் தனியார் பஸ் நடத்துனர் மற்றும் சாரதி உள்ளிட்ட சிலர் இரவு 8.30 மணியளவில் நின்றுள்ளனர். இதன் போது அவ் வீதி வழியாக இரண்டு மோட்டர் சைக்கிள்களில் நகரை நோக்கி வந்த மூன்று போக்குவரத்து பொலிசார் அவர்களை வீதியை விட்டு விலகி நிற்குமாறு கூறியுள்ளனர். இதன் போது மது போதையில் நின்ற நடத்துனர் ஒருவர் போக்குவரத்து பொலிசாருடன் வாக்குவாதப்பட்டுள்ளார். இதனையடுத்து அருகில் நின்ற ஆட்டோ ஒன்றினை அழைத்து அதில் குறித்த நடத்துனரை ஏற்றிச் சென்ற போக்குவரத்து பொலிசார் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லாது ஆட்டோவுக்குள் வைத்தும் வவுனியா பொலிஸ் தலைமை அலுவலகத்திற்கு அருகில் அழைத்து சென்றும் கடுமையாக தாக்கியுள்ளனர். ஆட்டோவில் நடத்துனரை அழைத்துச் சென்றதையடுத்து பின்னால் சென்று அவனை விடுமாறு கோரிய பஸ் சாரதி ஒருவரையும் கைது செய்து வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று சிறையில் அடைத்துள்ளனர்.
பொலிசாரின் தாக்குதலால் காயமடைந்த நடத்துனரை வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்த பொலிசார் சாரதியை தடுத்து வைத்தனர். இன்று மதியம் அளவில் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் குறித்த பொலிசாருக்கு எதிராக முறைப்பாட்டையும் பதிவு செய்துள்ளனர்.
SHARE