19-06-2014 இன்று வவுனியா நகரில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் முஸ்லிம் கடைகள் மாத்திரமே பூட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று காலை கண்டன கூட்டம் ஒன்றை முஸ்லிம் வர்த்தகர்களும் முஸ்லிம் தலைவர்களும் நகரப் பகுதியில் நடத்தினர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இதனை அறிந்து அங்கு வந்த வவுனியா மாவட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சன் அபேயவர்த்தன, “வவுனியாவில் அனைத்துச் சமூகத்தினரும் ஒற்றுமையாக வாழ்கின்றனர். அந்த அமைதியைக் குழப்ப வேண்டாம். நீங்கள் விரும்பினால் கடைகளைப் பூட்டி அமைதியான முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்துங்கள். பொது இடங்களில் கூடி குழப்பம் விளைவிக்க வேண்டாம். இங்கு இனங்களுக்கிடையிலோ, மதங்களிற்கிடையிலோ குழப்பம் ஏற்பட மாட்டாது. அதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம்” என்றும் அறிவுறுத்தினார்.
அத்துடன், அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அவர் பணித்தார். இதனால் அங்கு கூடியவர்கள் கலைந்து சென்றனர்.