வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழில் நுட்ப பீட திறப்பு விழா மற்றும் பரிசழிப்பு விழா நிகழ்வில் இன்று (12.11.2015) கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை நாட்டின் முக்கிய பிரச்சனையாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரச்சனையாக காணப்படுகின்றது. இதற்கு பின்னுக்கு முன் முரணான பல பிரச்சனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நேற்று (11.11.2015) அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்வதாக கூறியிருந்தனர். ஆனால் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு 10இலட்சம் ரூபா சரீர பிணை என்றவுடன் அவர்கள் மீண்டும் சிறைக்கு திரும்ப வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த நாட்டில் யுத்தம் நடைபெற்று முடிந்து 06 வருடங்களாக ஒரு சுமூகமான சூழ்நிலையில் சிறையில் வாடும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. நிச்சயமாக மலையக மக்கள் முன்னணியில் இருக்கின்ற நாங்கள் மலையகத்தில் இது தொடர்பாக போராடிய சந்திரசேகரன் அவருடைய கட்சியை சார்ந்தவன் என்ற ரீதியிலும் அவர்களும் இந்த நாட்டிலே மனிதர்கள் என்ற ரீதியில் விடுதலை செய்யப்பட வேண்டும்.
இவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று நான் கூறவில்லை எந்த வகையிலாவது விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.