வவுனியா தரணிக்குளம் பகுதியில் இளைஞன் ஒருவரிடமிருந்து நேற்று இரவு 7மணியளவில் 440கிராம் கஞ்சா மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புளியங்குளம் இராமனூர் விஷேட அதிரடிப்படையினருக்குக்கிடைத்த இரகசிய தகவல் ஒன்றில் தரணிக்குளம் பகுதியில் சென்ற இளைஞன் ஒருவரிடம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது அவரது உடமையிலிருந்து 440கிராம் கேரளா கஞ்சாவினை மீட்டுள்ளனர்.
தரணிக்குளம் பகுதியைச் சேர்ந்த 25வயதுடைய இளைஞனைக் கைது செய்த படையினர் வவுனியா பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.