வவுனியா பெரிய கோமரசன்குளம் மகா வித்தியாலய மாணவிகள் பளுதூக்கலில் சாதனை

240

2024.02.23, 24, 25 ஆம் திகதிகளில் காலி போத்திவேல தேசிய பாடசாலையில் நடைபெற்ற இளையோர், கனிஷ்ட, சிரேஸ்ர விளையாட்டு போட்டியில் வ/வவுனியா பெரிய கோமரசன்குளம் மகா வித்தியாலய மாணவிகள் இருவர் தங்கப் பதக்கமும், ஒரு வெள்ளிப் பதக்கமும், ஒரு வெண்கல பதக்கத்தையும் பெற்றுள்ளனர்.

பா.கிசாளினி 49 kg எடை பிரிவில் 80 kg எடையை தூக்கி முதலாம் இடத்தையும், த.வன்சிகா 64 kg எடை பிரிவில் 44 kg தூக்கி முதலாம் இடத்தையும், க.அபிசாளினி 81 kg எடை பிரிவில் 70 kg தூக்கி இரண்டாம் இடத்தையும், ச.அனுஷா 59 kg எடைபிரிவில் 61 kg எடையை தூக்கி மூன்றாம் இடத்தையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இவர்களை பயிற்றுவித்த ஞா.ஜீவன் ஆசிரியர் அவர்களுக்கும், வெற்றியீட்டிய மாணவிகளுக்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

SHARE