வவுனியா மாவட்ட மகளீர் அபிவிருத்தி நிலையங்களின் விற்பனை கூடத்தில் அமைச்சர் டெனிஸ்வரன்

547

 

 

 

thina 5

வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களுடனான சந்திப்பு வவுனியா உள்ளக சுற்றுவட்ட வீதியில் அமைந்துள்ள கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் பல்நோக்கு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை(12) காலை நடைபெற்றது. மாவட்ட ரீதியாக கிராம அபிவிருத்தி சங்கங்களின் செயற்பாடுகளை நேரில் சந்தித்து அறிந்துகொள்ளும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஒர் அங்கமாக இந்த சந்திப்பு இடம்பெற்றது. வட மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் நேரடியாக மக்களை சந்தித்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கேட்டறிந்ததுடன் ஒவ்வொரு கிராம அபிவிருத்தி சங்கங்களும் மாவட்டத்தின் அபிவிருத்தியில் பங்கெடுத்து மாவட்டத்தையும் எமது மாகாணத்தையும் அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்ல முன்வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வில் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினரால் தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்ய வசதியாக விற்பனை நிலையம் ஒன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம்,  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான  சிவசக்தி ஆனந்தன், எஸ்.வினோ நோகராதலிங்கம் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதுவவுனியா மாவட்ட மகளீர் அபிவிருத்தி நிலையங்களின் விற்பனை கூடத்தில் அமைச்சர் டெனிஸ்வரன்தலமையில் நடைபெற்ற வைபவத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

 

thina 5

thinapp2 thina2 thinapp3 thinapp4

 

 

TPN NEWS

 

 

SHARE