வாகனங்களைக் கட்டுப்படுத்தும் நவீன அப்பிளிக்கேஷன்

413
ஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது மனிதர்களின் ஆரோக்கியத்தினை அதிகரிக்கும் ஸ்மார்ட் கைப்பட்டிகள் வரை எட்டிவிட்டது.இவ்வாறிருக்கையில் மேலும் ஒருபடி முன்னேறி ஸ்மார்ட் கடிகாரத்தின் உதவியுடன் வாகனங்களைக் கட்டுப்படுத்தக்கூடிய அப்பிளிக்கேஷன் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Viper SmartStart 4.0 எனும் இந்த அப்பிளிக்கேஷன் ஆனது அன்ரோயிட் மற்றும் அப்பிளின் iOS கைக்கடிகாரங்கள் மற்றும் மொபைல் சாதனங்களில் நிறுவி பயன்படத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

CDMA/3G இணையத் தொழில்நுட்பத்தில் செயல்படும் இதன் ஊடாக BMW, VW மற்றும் Volvo ஆகிய நிறுவனங்கள் அறிமுகம் செய்யும் வாகனங்களை கட்டுப்படுத்த முடியும்.

இணையத்தள முகவரி – http://www.viper.com/SmartStart/New/

 

SHARE