வாகன இறக்குமதி தடையை நீக்கி புதிய வரி விகிதங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் முடிவு

16

 

 

யுனைடெட் மோட்டார்ஸ் லங்கா பிஎல்சி (United Motors Lanka PLC) அதன் வாகன வரிசைக்கான புதிய விலைப்பட்டியலை வெளியிட்டுள்ளது. 

வாகன இறக்குமதி தடையை நீக்கி புதிய வரி விகிதங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் முடிவு செய்ததைத் தொடர்ந்து இந்த விலைப்பட்டியல்  வெளியாகியுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட விலையானது தற்போதைய மாற்று விகிதங்கள், அரச வரிகள் மற்றும் 18 வீத வற் வரிகளைத் தவிர பிற வரிகளை பிரதிபலிக்கின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனப்படையில், வாகனங்களின் விலை மற்றும் வரிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்படி,

மிட்சுபிசி அட்ரேஜ் – 11.23 மில்லியன் ரூபாவுடன் வற் வரி

மிட்சுபிசி எக்ஸ்பாண்டர் – 14.99 மில்லியன் ரூபாவுடன் வற் வரி

மிட்சுபிசி எக்ஸ்பாண்டர் கிராஸ் – 16.1 மில்லியன் ரூபாவுடன் வற் வரி

மிட்சுபிசி அவுட்லேண்டர் ஸ்போர்ட் – 15.675 மில்லியன் ரூபா வற் (மேல்)

மிட்சுபிசி எக்லிப்ஸ் கிராஸ் – மதிப்பிடப்பட்ட 19 மில்லியன் ரூபாவுடன் வற் வரி

 

மிட்சுபிசி எல்200 – 18.135 மில்லியன் ரூபாவுடன் வற் (மேல்)

மிட்சுபிசி மொன்டெரோ ஸ்போர்ட் – 49.58 மில்லியன் ரூபாவுடன் வற் வரி

இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் வாகனங்களைத் தாங்கிய கப்பல் ஒன்று எதிர்வரும் 25 ஆம் மற்றும் 27 ஆம் திகதிகளில் இலங்கையை வந்தடையும் என தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE