வாட்ஸ் அப் உரையாடல்களை நாம் அழித்துவிட்டாலும் அது முற்றிலுமாக அழியாது என இண்டெர்நெட் வல்லுனர் ஒருவர் கண்டறிந்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ் அப் மூலம் மேற்கொள்ளப்படும் உரையாடல்கள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் என்கிரிப்ட் செய்யப்படுகிறது. இதன் மூலம் 3ம் நபர் அறியாத வகையில் பாதுகாப்பான உரையாடல் நடைபெறும் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் வாட்ஸ் அப் உரையாடல்களை நாம் அழித்துவிட்டாலும் அது முற்றிலுமாக அழியாது என இண்டெர்நெட் வல்லுனர் ஒருவர் கண்டறிந்துள்ளார். இந்நிலையில் டிஜிட்டல் தடயவியல் விஞ்ஞானியான ஜோனதன் ஸ்ட்டிஜிர்ஸ்கி வாட்ஸ் அப் உரையாடல்களை நாம் டெலிட் செய்தாலும் அந்த உரையாடல்கள் முற்றிலுமாக அழிந்துவிடாது என அதிர்ச்சி தருகிறார். உரையாடல்களை அழிக்கும் போது அழிந்தது என காட்டினாலும், அழிக்கப்பட்ட டேட்டா பகுதி மீது புதிய உரையாடல்கள் பதிவு ஆவதில்லை என்பதை கண்டறிண்ட்துள்ளார். இதன் மூலம் மென்பொருள் உபயோகித்து அழிக்கப்பட்ட உரையாடல்களை மீட்கலாம் என்றும், மேலும் வாட்ஸ் அப் நிறுவனம் தனது அடுத்த பதிப்புகளில் இந்த தவறினை சரிசெய்யும் என எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்