வாணவேடிக்கை காட்டி பாபர் அசாம் அணியை சம்பவம் செய்த பொல்லார்டு

149

 

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் கராச்சி கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெஷாவர் ஸல்மி அணியை வீழ்த்தியது.

பாபர் அசாம் 72
லாகூரில் நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ் மற்றும் பெஷாவர் ஸல்மி அணிகள் மோதின.

முதலில் ஆடிய பெஷாவர் அணி 154 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. கேப்டன் பாபர் அசாம் 72 ஓட்டங்களும், ரோவ்மான் பௌல் 39 ஓட்டங்களும் விளாசினர். மிர் ஹம்சா, ஹசன் அலி தலா 3 விக்கெட்டுகளையும், டேனியல் சாம்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய கராச்சி அணியில் கேப்டன் ஷான் மசூட் 12 ஓட்டங்கள் எடுத்த நிலையில் லுக் வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பொல்லார்டு வாணவேடிக்கை
அதனைத் தொடர்ந்து முகமது அஹ்லக் 24 (13) ஓட்டங்களிலும், சோயப் மாலிக் 29 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் ஜேம்ஸ் வின்ஸ் மற்றும் கீரோன் பொல்லார்டு கூட்டணி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.

குறிப்பாக பொல்லார்டு சிக்ஸர்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டினார். இதன்மூலம் கராச்சி கிங்ஸ் 16.5 ஓவர்களில் 157 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஜேம்ஸ் வின்ஸ் 30 பந்துகளில் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 38 ஓட்டங்கள் குவித்தார். பொல்லார்டு 21 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 49 ஓட்டங்கள் விளாசினார்.

SHARE