காஸாவிற்கு உதவிகளை விமான வழியாக வழங்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், உதவித்தொகை வழங்கப்படும் திகதி உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்படவில்லை.
காஸாவுக்கு அதிக உதவிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் தற்போது வழங்கப்பட்டுள்ள உதவி போதாது எனவும் ஜோ பிடன் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், தொடர் முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.
காஸாவிற்கு கடல் உதவி வழங்குவது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாகவும் வெள்ளை மாளிகையின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
காஸாவிற்கு உதவி பெற சென்ற 112 பேர் கொல்லப்பட்டதாக நேற்று அமெரிக்கா அறிவித்துள்ளது.எனினும் கூட்ட நெரிசலில் சிக்கி அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.