பில்லியனர் பில்கேட்ஸ் எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு அச்சுறுத்தல் குறித்து கேட்டபோது சுவாரஸ்யமான கருத்துக்களை தெரிவித்தார்.
தற்போதைய AI தொழில்நுட்பம் படு வேகமாக வளர்ந்து வருகிறது. வரும் நாட்களில் செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்தை அச்சுறுத்துமா? இந்தக் கேள்விகளுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனர் கோடீஸ்வரர் பில்கேட்ஸ் சுவாரஸ்யமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
பிரபல நகைச்சுவை நடிகர் ட்ரெவர் நோஹ் தொகுத்து வழங்கிய ‘வாட் நவ்’ பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பில் கேட்ஸ் பங்கேற்றார். இந்தச் சந்தர்ப்பத்தில், வரும் நாட்களில் AI தொழில்நுட்பத்தால் மனிதர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல் குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டன.
பொதுவாக, மைக்ரோசாப்ட் தலைவர் வணிகம் தொடர்பான விஷயங்களை மட்டும் பேசுவதில்லை. பில் கேட்ஸ் தனது 18 வயது முதல் 40 வயது வரையிலான இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தை உருவாக்குவதற்கான ‘mono-maniac’ (ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்) வழியில் செலவிட்டதாகக் கூறினார்.
தற்போது, ’வேலை செய்வது மட்டும் வாழ்க்கையின் நோக்கம் அல்ல’ என்பதை, 68வது வயதில் உணர்ந்துள்ளார்.
நாம் கடினமாக உழைக்க வேண்டியதில்லை
வாரம் மூன்று நாள் வேலை என்ற முறை இறுதியில் நடைமுறைக்கு வந்தாலும், அது மட்டுமே நாம் செய்ய வேண்டிய ஒன்று அல்ல என்று பில் கேட்ஸ் கூறினார்.
ஏனென்றால், இயந்திரங்கள் உணவு செய்வது உட்பட அணைந்து விடயங்களையும் தாங்களாகவே செய்ய முடியும், அதற்காக நாம் கடினமாக உழைக்க வேண்டியதில்லை.
பில் கேட்ஸ் முந்தைய நேர்காணல்கள் மற்றும் வலைப்பதிவுகளிலும் AI தொழில்நுடபத்தின் நன்மை தீமைகளைக் குறிப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஜூலை 2023-ல் பகிரப்பட்ட ஒரு பதிவில், AI தொழில்நுட்பத்தால் ஏற்படும் ஆபத்துக்களைக் குறிப்பிட்டுள்ளார். செயற்கை நுண்ணறிவின் (AI) சாத்தியமான அபாயங்களில் தவறான தகவல்கள், Deepfakeகள், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், வேலை சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் கல்வியில் AI-ன் தாக்கம் ஆகியவை அதில் அடங்கும்.
AI எதிர்காலம் ஆபத்தானது அல்ல
ஒரு புதிய தொழில்நுட்பம் தொழிலாளர் சந்தையை மாற்றுவது இது முதல் முறை அல்ல. AI-ன் தாக்கம் தொழில்துறை புரட்சியைப் போல வியத்தகு முறையில் இருக்கும் என்று அவர் நினைக்கவில்லை என்றார். ஆனால், கம்ப்யூட்டரின் வருகையை விட இது நிச்சயம் பாரியதாக இருக்கும் என்றார்.
மற்றொரு விடயம் என்னவென்றால், AI-ன் எதிர்காலம் சிலர் நினைப்பது போல் அல்லது மற்றவர்கள் நினைப்பது போல் ஆபத்தானது அல்ல. புதிய தொழில்நுட்பத்தின் ஆபத்துகள் உண்மையானவை, ஆனால் அவற்றை மனிதர்களால் எளிதில் நிர்வகிக்க முடியும் என்று பில் கேட்ஸ் கூறினார்.
‘The Age of AI is Begin’ என்ற தலைப்பில் மார்ச் வலைப்பதிவில், கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும் AI-powered software திறனில் கேட்ஸ் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். ChatGPTயானது, 1980-களில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு graphical user interface-க்கு சமமான ஒரு அற்புதம் என்று பாராட்டினார்.
GPT மாதிரியுடன், இந்த AI- அடிப்படையிலான கருவிகள் அடுத்த பத்தாண்டுகளில் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கும், ஒதுக்கப்பட்ட சமூகங்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும், என்றார்.
தொழில்நுட்ப மாற்றத்தை அரசாங்கம் ஆதரித்தால், அது சாதகமாக இருக்கும் என்று கேட்ஸ் பரிந்துரைத்தார். இணக்கமான மாற்றத்திற்கான புதிய திறன்களைப் பெறுவதன் முக்கியத்துவத்தை பில் கேட்ஸ் வலியுறுத்தினார்.