வாலிபரை மணக்க விரும்புகிறார் 63 வயதாகும் இந்தி நடிகை 

347



 1970களில் பாலிவுட் படவுலகை கலக்கியவர் ஜீனத் அமன்.  ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ படத்தில் ‘தம் மாரே தம்…’ பாடல்  மூலம் பிரபலமானார். ‘யாதோங் கி பாரத்’ படத்தில் ‘சுராலியா ஹை  தும்னே ஜோ தில் கோ’ பாடல் மூலமும், ராஜ்கபூர் இயக்கிய ‘சத்யம்  சிவம் சுந்தரம்‘ படத்தில் ஜாக்கெட் அணியாமல் நடித்தும் ரசிகர்கள்  மனதில் இடம்பிடித்தார். ‘குர்பானி’ படத்தில் பல காட்சிகளில்  பிகினியில் நடித்திருந்தார்.பாலிவுட் கவர்ச்சி நாயகியாக வலம் வந்த  ஜீனத்துக்கு அவரது திருமண வாழ்க்கை சோகத்தையே ஏற்படுத்தியது.  மஸார் கான் என்பவரை மணந்தார். இவர்களுக்கு அஸான், சஸான்  என 2 மகன்கள் பிறந்தனர். கணவர் மற்றும் குடும்பத்தினர் செய்த  கொடுமை தாங்காமல் மஸாரை விவாகரத்து செய்தார். 63 வயதாகும்  ஜீனத் அமனுக்கு தற்போது திருமண ஆசை வந்துள்ளது. அவர்  கூறும்போது, ‘மீண்டும் ஒருமுறை நான் வாழ்க்கையில் செட்டிலாக  எண்ணுகிறேன். எனது மகன்கள் படித்து நல்லநிலையில் உள்ளனர்.  எனவே மீண்டும் புதுவாழ்க்கையை தொடங்க நினைக்கிறேன். எனக்கு  ஏற்ற வாலிபர் கிடைத்தால் அவரை காதலித்து மணந்துகொள்ள  தயாராக இருக்கிறேன்’ என்றார். 63 வயதாகும் ஜீனத்தை காதலித்து  மணக்க எந்த வாலிபர் தயாராக இருக்கிறார் என்றுதான்  தெரியவில்லை என பாலிவுட் ஹீரோயின்கள் கமென்ட்  அடிக்கின்றனர்

 

SHARE