இரு விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் வாள் வெட்டில் முடிவடைந்ததில் ஒன்பது பேர் காயங்களுடன் பருத்தித்துறை ஆதரார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று மாலை வடமராட்சி மாதனைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மாதனைப் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் பிரிதொரு விளையாட்டு கழகம் விளையாட்டில் ஈடுபட்டதனாலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இரு தரப்பினரையும் சேர்ந்த எட்டுப் பேர் வெட்டுக் காயங்களுடனும் , ஒருவர் அடி காயங்களுடனும் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக பருத்தித்துறை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.