வாழைச்சேனையில் திருடப்பட்ட லொறி கம்பஹாவில் மீட்பு: ஒருவர் கைது …

364

வாழைச்சேனை கூட்டுறவுச்சங்க வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றைத் திருடிச்சென்ற லொறியை கம்பஹா கடுவல பிரதேசத்தில் உள்ள கராச் ஒன்றியில் மீட்டுள்ளதுடன், கராச் உரிமையாளர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த லொறியை அதன் சாரதி வழமை போல கூட்டுறவுச்சங்க வாகன தரிப்பிடத்தில் இரவில் தரித்து விட்டுச் சென்றுள்ளார்.

சம்பவதினமான கடந்த 10 ஆம் திகதி காலையில் வழமை போல வாகன தரிப்பிடத்துக்கு சாரதி சென்றபோது அங்கு லொறி திருடு போயுள்ளதையடுத்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

வாழைச்சேனையில் திருடப்பட்ட லொறி கம்பஹாவில் மீட்பு: ஒருவர் கைது (Photos)

 

இது தொடர்பாக பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டுவந்த விசாரணையில் வாகன தரிப்பிட காவலாளி இரவு கடமையைக் காலை 6 மணிக்கு முடித்துக் கொண்டு வீடு சென்ற நிலையில், பகல் காவலாளி காலை 7 மணிக்கு வந்து கடமையை ஏற்கும் 6 தொடக்கம் 7 மணி வரையிலான ஒரு மணித்தியால இடைப்பட்ட நேரத்தில் அங்கு காவலாளிகள் இல்லாத நிலையில் இக்கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த லொறியை வேறு ஒரு சாவியைப் போட்டு ரான்ஸ்போட் முகவர் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் லொறியை திருடிக் கொண்டு சென்று குறித்த பிரதேசத்திலுள்ள கராச்சில் வர்ணம் பூசுவதற்காக விட்டுச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

வாழைச்சேனையில் திருடப்பட்ட லொறி கம்பஹாவில் மீட்பு: ஒருவர் கைது (Photos)

இதனையடுத்து குறித்த கராச் உரிமையாளரைக் கைது செய்துள்ளதுடன், லொறியை மீட்டு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் முன்னிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவத்தின் சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE