தெலுங்கில் மயுரி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதன்பின் தமிழ், இந்தி என கலக்கியவர் நடிகை சுதா சந்திரன். விக்ரமின் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகியிருந்த சாமி ஸ்கொயர் படத்திலும் நடித்திருந்த இவர் தற்போது பல சீரியல்களில் பிசியாக நடித்து வருகிறார்.
மும்பையை பூர்வீகமாக கொண்ட இவருக்கு சிறுவயதில் திருச்சியில் கோர விபத்து ஒன்று நடந்தது. அதை பற்றி சமீபத்திய பேட்டியில் பகிர்ந்த சுதா சந்திரன், அந்த விபத்தில் குறைந்தபட்ச காயமடைந்தது நான் தான்.
என்னை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். வண்டி ஓட்டியவர் என் மடியில் சிதைந்து கிடந்தார். ஒரு பெண்மணி அதைவிட கொடூரமாக… என வாழ்க்கையோட அசிங்கமான பகுதி என்று சொல்வார்களே அதை அன்றிரவு தான் பார்த்தேன், மே-2. மிகவும் பொத்தி பொத்தி எனது பெற்றோர்கள் பாதுகாத்து வந்ததை அன்றிரவு, இது தான் உண்மையான வாழ்க்கை என காட்டிவிட்டது என கண்கலங்க கூறினார்.